
திறக்கப்படாத பழைய ஐபோன் 45 லட்சத்திற்கு விற்பனை!
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் நிறுவனம் இதுவரை ஐபோன் 14 வரை மாடல்களை அறிமுகம் செய்து இருக்கின்றது. இந்த ஆண்டின் இறுதியில் ஐபோன் 15 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.
இதனிடையே, திறக்கப்படாத பழைய ஐபோன் மாடல்களை ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏற்கனவே அமெரிக்காவில் நடைபெற்ற ஒரிஜினல் ஐபோன் மாடல் 50 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
தற்போது சீல் செய்யப்பட்ட நிலையில், இருக்கும் ஒரிஜினல் ஐபோன் மாடல் 55 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் மட்டுமே ரூ.45 ,44402 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.
ஐபோன் நிறுவனம்
திறக்கப்படாத பழைய ஐபோன் அதிக தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது
மேலும், முன்னதாக பழைய ஐபோன் மாடல்கள் இந்திய மதிப்பில் ரூ.28 லட்சத்திற்கு சென்றிருந்தது.
16 ஆண்டுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் மதிப்பு இன்றளவும் குறையவில்லை. ஐபோன் மட்டுமின்றி அதன் மற்ற பொருட்களுக்கும் இப்படியான வரவேற்பு உள்ளது.
எனவே, ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மாடல் ஆனது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அடுத்து, ஆப்பிள் அதிகாரி டிம் குக் கையெழுத்திட்ட ஐபோன் 11 மாடல் இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரத்து 490-க்கு விற்பனையாகி உள்ளது.
இதேபோன்று, ஸ்டீவ் ஜாப்ஸ் இன் தொழில்நுட்ப குறிப்புகள் 10 லட்சத்து 32 ஆயிரத்து 755 க்கும் விற்பனையாகி இருந்தது.