ஆப்பிள் ஐபோன் iOS 16 ஒளிந்திருக்கும் அம்சங்கள் - என்னென்ன?
உலகில் மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் பிரபலமானவை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்றால் அது மிகையாகது. இதை மக்கள் அதிகம் வாங்குவதற்கு முக்கிய காரணம் இவற்றில் இருக்கும் தனிப்பட்ட வசதிகள். இந்த வசதிகள் ஐபோன்களில் மட்டுமே இருக்கும். அமெரிக்காவில் மட்டும் சுமார் 50% மக்கள் ஐபோனை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த போன்களை மக்கள் வாங்கி பெரும்பாலும் கேமரா, காலிங், மெசேஜ் போன்றவற்றிற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால், இதில் பல வசதிகள் மறைந்துள்ளது அவை என்ன என்பதை பற்றி பார்ப்போம். 1. முதலில் ஐபோனை பயன்படுத்தி உயரம், அகலம் போன்ற விஷயங்களை தெரிந்துகொள்ளமுடியும். இதனை உங்களின் கேமரா ஆப் திறந்த Level tool பயன்படுத்தி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
ஐபோன் iOS 16 பலரும் அறிந்திடாத வசதிகள் இங்கே
2. அடுத்து, நமது மெசேஜ் யாருக்கும் தெரியாமல் இருக்க நாம் Note APP பயன்படுத்தி text மெசஜ் அனுப்பலாம். மேலும் அனுப்பிய மெசஜ் நாமே டெலீட் செய்யலாம். 3. ஐபோன் முலமாக நீங்கள் நேரலையில் போட்டோ எடுக்கலாம். இவை Boomerang Effect போல உங்களுக்கு காட்டும். உங்களின் போட்டோ ஆப் திறந்து அதில் Live போட்டோ ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் 2 நொடிகள் Live Photo எடுக்கமுடியும். 4. முக்கியமாக இங்கு புதிய ஐபோன்களில் Home பட்டன் இடம்பெறுவதில்லை. ஆனால், அதற்கு பதிலாக பின்புறம் சென்சார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை, வைத்து நாம் Flashlight, Siri, Reachability போன்றவற்றை இரண்டு முறை ஐபோனின் பின்புறத்தை தட்டுவதன் மூலமாக செய்யமுடியும்.