ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்!
ஏமாற்றமளிக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 சீசனுக்குப் பிறகு, நான்கு முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் 2023இல் மீண்டெழும் நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது. தோனி தலைமையிலான சிஎஸ்கே கடந்த சீசனில் 10 அணிகள் கொண்ட பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்தது. கடந்த டிசம்பரில் நடந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல் மற்றும் பகத் வர்மா ஆகியோரையும் கைப்பற்றியது. தோனியின் கடைசி சீசன் இது என்பதால், சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்
2010, 2011, 2018, மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சிஎஸ்கே நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மேலும் 2008, 2012, 2013, 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. சிஎஸ்கே அணி: எம்எஸ் தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, சிம்மேஷ் பஜேதர், சிம்மேஷ் பட்ஹோவ் , தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, சிசண்டா மகலா, அஜய் மண்டல், பகத் வர்மா.