ஐபிஎல் 2023 : நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆதிக்கம் தொடருமா?
குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) நடப்பு சாம்பியனாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இல் பங்கேற்கிறது. அகமதாபாத்தை தளமாகக் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் 2022 ஐபிஎல்லில் அறிமுகமான நிலையில், தனது முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் கோப்பையை வென்றது. கடந்த டிசம்பரில் நடந்த ஏலத்தில் கேன் வில்லியம்சன் (ரூ.2 கோடி) மற்றும் கே.எஸ்.பாரத்தை (ரூ.1.2 கோடி) ஆகியோரை குஜராத் டைட்டன்ஸ் அணி அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளது. லாக்கி பெர்குசனை விட்டுவிட்டு வேகப்பந்து வீச்சாளர்களான ஷிவம் மாவி (ரூ.6 கோடி) மற்றும் ஜோசுவா லிட்டில் (ரூ.4.4 கோடி) ஆகியோரையும் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஒடியன் ஸ்மித்தை ரூ. 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.
2022 ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் செயல்திறன்
ஐபிஎல் 2022 சீசனின் லீக் கட்டத்தில் 14 ஆட்டங்களில் 10 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து குஜராத் டைட்டன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது. அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் தீவட்டியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே ஜெயந்த் யாதவ், ஆர் சாய் கிஷோர், நூர் அகமது, மோஹித் ஷர்மா, ஜோஷ்வா லிட்டில், உர்வில் பட்டேல், சிவம் மாவி, கேஎஸ் பாரத், ஒடியன் ஸ்மித், கேன் வில்லியம்சன்.