காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர்
காஷ்மீர், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரயில் சேவை மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படும். ரயில்வே அமைச்சகம், இப்பகுதியின் வானிலை மற்றும் குளிர் நிலைமைகளுக்கு ஏற்றவாறு வந்தே பாரத் ரயிலை உருவாக்கி வருகிறது. "இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரிக்குள், ரயில் சேவை தொடங்கப்படும்" என்று ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் கூறியுள்ளார். "ஜம்மு-காஷ்மீருக்கு, பிரத்யேகமாக வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியின் வெப்பநிலை மற்றும் பனிப்பொழி கணக்கில் எடுக்கப்பட்டு, அதற்கேற்ப ரயில் தயாரிக்கப்படுகிறது. அதில் வெப்ப அமைப்புகள் மற்றும் பிற வசதிகள் இருக்கும். அடுத்த வருடத்திற்குள் இந்த ரயில் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வரும்" என்று வைஷ்ணவ் கூறி இருக்கிறார்.