உலகளவில் செயல்படும் புளூ டிக் சேவை - பழைய வெரிஃபைடு முறை நிறுத்தம்!
சமூக வலைத்தளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு அம்சங்களை கொண்டு வந்துள்ளார். அதில் ஒன்று தான் ட்விட்டரின் புளூ டிக் வசதி. இந்த வசதியை பெறுபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறியிருந்தது. ட்விட்டர் கணக்குகளின் வெரிபைட் பேட்ஜ் பற்றி இதுவரை பலவிதமான அப்டேட்கள் வந்துள்ளன. இதில் ஒருசிலவற்றை எலான் மஸ்க் பிரத்தியேகமாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டு இருந்த வெரிஃபைடு வசதியை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுக்க புளூ டிக் பெறுவதற்கு சந்தா வந்துள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்துகிறது என்று அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.