Page Loader
தங்கம் விலை இன்று ரூ.160 வரை உயர்வு - இன்றைய நாளின் முழு விபரங்கள்
தங்கம் விலையானது மார்ச் 24-இல் இன்று ரூ.160 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இன்று ரூ.160 வரை உயர்வு - இன்றைய நாளின் முழு விபரங்கள்

எழுதியவர் Siranjeevi
Mar 24, 2023
01:11 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு. இதனால், 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. ஆனால் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5000-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. அந்த வகையில்,இன்றைய நாள் மார்ச் 24 ஆம் தேதிபடி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து 5,560 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.160 வரை உயர்ந்து ரூ.44,480 ஆகவும் விற்பனையாகிறது.

தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை விபரம் இங்கே

தொடர்ந்து, வெள்ளியிம் விலையும், ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து ரூ.75.70-க்கு ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 75700.00 எனவும் விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.