எர்த் ஹவர் என்றால் என்ன? மற்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்
'Earth Hour' என்பது ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் நடைபெறும் ஒரு இயக்கமாகும். இந்த இயக்கம், உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைத்து, பூமியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும், காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவும் வலியுறுத்துகிறது. இந்த ஆண்டு, இந்த Earth Hour, மார்ச் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த இயக்கத்தை பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள வேண்டியவை: Earth Hour என்பது உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) உலகளாவிய முயற்சியாகும். மக்கள், சமூகங்கள் மற்றும் வணிகங்கள் அனைத்தையும், ஒரு மணிநேரத்திற்கும், அதோடு அத்தியாவசியமற்ற மின் விளக்குகளை அணைத்து வைக்கவும் ஊக்குவிக்கிறது. இது புவியின் மீதான அர்ப்பணிப்பைக் காட்டுவதற்காக செய்யப்படுகிறது.
பூமியை பாதுகாக்கும் நோக்கத்தோடு அனுசரிக்கப்படும் Earth Hour
இந்த Earth Hour வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் 190க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்கின்றன. இந்த Earth Hour-இல், பிரபல சுற்றுலா தளங்களும், வீடுகளும், இரவு 8:30 முதல் 9:30 மணி வரை விளக்குகளை அணைத்து, அந்த நேரத்தில், பூமிக்கு பயனுள்ள மற்றும் சாதகமான ஏதேனும் ஒரு செயலை செய்யலாம். உதாரணமாக, விளக்குகள் அணையும்போது, உங்கள் அருகிலுள்ள பகுதியை சுத்தம் செய்வதில் நேரத்தை செலவிடலாம். அல்லது உங்கள் குடியிருப்பைச் சுற்றி சில மரங்களை நடலாம்.