இன்று சர்வதேச வனங்கள் தினம் 2023 : வனங்களின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்
வனங்கள், உலகின் நுரையீரல்களாக இருக்கின்றன. ஏனெனில் மரங்கள் தான், பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் சுவாசிக்க ஆக்ஸிஜனை வழங்குகிறது. அதேபோல, உயிரனங்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி கொண்டு, உயிரனங்கள் நடமாட ஏற்ற இடமாக மாற்றியுள்ளது. அதுமட்டுமின்றி, பூமியின் நிலப்பரப்பை தாங்கி பிடிக்கும் தூங்கவும் மரங்கள் உள்ளன. காண மழை, பெருவெள்ளம் போன்றவற்றால் ஏற்படும், மண் அரிப்பை தடுக்கிறது. அதுமட்டுமின்றி, மழை பொழிவிற்குமே வனங்களும், மரங்களும் முக்கியமான ஒன்று. இதோடு, மாசுபட்ட காற்றை சுத்திகரிக்கவும், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வீடாகவும், பல நேரங்களில் உணவாகவும் இருக்கிறது மரங்களும், வனங்களும். அப்படி பட்ட காடுகளின் முக்கியத்துவத்தை, மக்களுக்கு வலியுறுத்தவும், அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கவும் தான், இந்த நாள்.
வனங்கள் பாதுகாப்பு தினத்தின் வரலாறும், இந்த ஆண்டின் கருப்பொருளும்
முதல் முதலாக, டிசம்பர் 20, 2006 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA), 2011 ஆண்டை, 'சர்வதேச காடுகளின் ஆண்டு'-ஆக அறிவித்தது. புவி வெப்பமடைதல், மற்றும் காடுகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, டிசம்பர் 21, 2012 அன்று, UNGA, ஆண்டு தோறும், மார்ச்-21 அன்று, 'சர்வதேச காடுகளின் தினம்'-ஆக கொண்டாட முடிவெடுத்தது. ஒவ்வொரு ஆண்டும், இந்த தினத்திற்கென்று ஒரு தீம் உண்டு. அதேபோல இந்த ஆண்டு, "காடுகள் மற்றும் ஆரோக்கியம்" எனும் தீமை தேர்ந்தெடுத்துள்ளனர். CPF எனப்படும் காடுகள் சார்ந்த தன்னார்வ நிறுவனம் தான், ஒவ்வொரு ஆண்டும், இந்த சர்வதேச வன பாதுகாப்பு நாளின் தீமை தேர்வு செய்வர்.