
ஐபிஎல் 2023 : இரண்டாவது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்
செய்தி முன்னோட்டம்
கடந்த சீசனின் இரண்டாம் இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இரண்டாவது பட்டத்தை பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ஆர்ஆர் அணி முந்தைய சீசனில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
ஷேன் வார்னின் தலைமையின் கீழ், ஆர்ஆர் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை முதல் சீசனில் வென்றது.
அதன்பின் அந்த அணி தொடர்ந்து நான்கு சீசன்களுக்கு பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது.
2013 மற்றும் 2018 க்கு இடையில், அவர்கள் மூன்று முறை முதல் நான்கு இடங்களில் முடித்தனர்.
குறிப்பிடத்தக்க வகையில், ஆர்ஆர் 2016 மற்றும் 2017 சீசனில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டு இருந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் 2023க்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விபரம்
அதன் பிறகு கடந்த ஆண்டு, சாம்சன் அணியை இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்ற நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோற்றனர்.
இந்த முறை மிகுந்த எதிர்பார்ப்புடன் அணியில் சேர்க்கப்பட்ட பிரஷித் கிருஷ்ணா காயம் காரணமாக விலகியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அணி: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், டிரென்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், ஆர் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், கே.சி. ஜேசன் ஹோல்டர், டொனாவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ஆடம் ஜம்பா, கேஎம் ஆசிஃப், எம் அஸ்வின், ஆகாஷ் வஷிஷ்ட், அப்துல் பிஏ, ஜோ ரூட்