இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எம்பி பதவியில் இருந்து நேற்று(மார் 24) தகுதி நீக்கப்பட்டார். ராகுல் காந்தியை போலவே தகுதி நீக்கப்பட்ட தலைவர்களைப் பற்றி இப்போது பார்க்காலம். இந்திரா காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, ஆறு ஆண்டுகள் தேர்தலில் கலந்துகொள்ள கூடாது என்ற தடை விதிக்கப்பட்டது. ஜூன், 1975இல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் இந்தியாவில் அவசரநிலை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் தலைவருமான ஜெ.ஜெயலலிதா 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறைத்தண்டனை பெற்றதையடுத்து சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து விலக நேரிட்டது.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆசம் கான் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசம் கான், வெறுப்புப் பேச்சுக்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதை அடுத்து, உத்தரப் பிரதேச சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராம்பூர் சதார் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த அவரது தகுதி நீக்கம் அக்டோபர் 2022 இல் நடந்தது. அனில் குமார் சாஹ்னி ஆர்ஜேடி எம்எல்ஏ ஆனந்த் சிங், பீகார் சட்டமன்றத்தில் இருந்து ஜூலை 2022 இல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.