Page Loader
தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் அறிமுகம் - சுற்றுலாத்துறை செயலாளர்
தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் அறிமுகம் - சுற்றுலாத்துறை செயலாளர்

தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் அறிமுகம் - சுற்றுலாத்துறை செயலாளர்

எழுதியவர் Nivetha P
Mar 24, 2023
02:41 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னையையடுத்த செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு பகுதியிலுள்ள ஏரியில் மிதக்கும் உணவகத்தினை தமிழக சுற்றுலாத்துறை அமைக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், முட்டுக்காட்டில் ரூ.5கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த உணவகம் தனியார் நிறுவன பங்களிப்புடன் செயல்படவுள்ளது. உணவகம் அமைக்க ஒரு புதிய படகு செய்யப்பட்டு, அதனை முட்டுக்காட்டு ஏரியில் மிதக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ஏரியில் மிதந்துக்கொண்டு அதன் அழகை ரசித்தவாறு உணவருந்தும் வகையில் இந்த உணவகம் அமையவுள்ளது. இரண்டடுக்கு கொண்டு உருவாக்கப்படவுள்ள இந்த படகு உணவகம் முழுவதும் ஏசிவசதி செய்யப்படவுள்ளது. ஏரியில் நீரின் ஆழம் குறைந்தாலும் மிதக்கும்வாறு இப்படகு கட்டமைக்கப்படவுள்ளது. மூன்று மாதங்களில் இந்த படகு தயாராகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் அறிமுகம்