Page Loader
ஹோண்டா மற்றும் டிவிஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் ஹோண்டா, டிவிஸ் நிறுவனங்கள்

ஹோண்டா மற்றும் டிவிஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

எழுதியவர் Siranjeevi
Mar 25, 2023
02:04 pm

செய்தி முன்னோட்டம்

தற்போதைய இந்திய வாகனசந்தையில் புதிய ட்ரெண்ட் எலக்ட்ரிக் வாகனங்கள். அதிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு பல சலுகைகளை வழங்க போவதாக அறிவித்ததை அடுத்து, பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், விரைவில் Honda நிறுவனமும், TVS நிறுவனமும், எலக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளன. ஹோண்டா நிறுவனம், ஏற்கனவே ஆக்டிவா 6ஜி என்கிற எலக்ட்ரிக் வாகனத்தை ஏற்கனவே சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதே வரிசையில், Honda நிறுவனமானது வரும் மார்ச் 29-ஆம் தேதி, தனது புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த போவதாக அறிவித்துள்ளது. TVS நிறுவனமுமோ, தனது புதிய வகை எலக்ட்ரிக் வாகனங்களில், காப்புரிமை பெற்ற பாகங்களை பயன்படுத்த போவதாக அறிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஹோண்டா மற்றும் டிவிஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்