Page Loader
அட்ரா சக்க... மாஸாக Entry கொடுக்கப்போகும் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரப்போகிறதா?

அட்ரா சக்க... மாஸாக Entry கொடுக்கப்போகும் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

எழுதியவர் Siranjeevi
Mar 16, 2023
08:02 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல நிறுவனமான ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தனது ஷைன் 100 என்ற பைக்கை அறிமுகம் செய்திருந்தது. ஹீரோ நிறுவனத்துக்கு போட்டியாக இந்த பைக் களமிறங்கியது. மேலும், ஹோண்டா நிறுவனம் தனது ஷைன் 100 அறிமுக விழாவில், எலக்ட்ரிக் செக்மெண்டிலும் காலடித் தடத்தைப் பதிக்கப்போவதையும், ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டருக்கு மார்டன் டச் வழங்கப்போவதையும் அறிவித்திருந்தது. அந்த வகையில், வரும் மார்ச் 29ஆம் தேதி தனது எலக்ட்ரிக் டூவீலர்கள் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடப்பவோதக அறிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தில் பெயர் போன வாகனம் என்றால் அது ஆக்டிவா தான். அதனாலே அந்த வாகனத்தை புது விதமாக தயாரித்து வெளியிடுகின்றனர். இதனால், தனது ஆக்டிவா ஸ்கூட்டரை தான் எலக்ட்ரிக் வெர்ஷனாக மாற்றி விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா நிறுவனம்

ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு எப்போது வரும்?

இதனால், தனது ஆக்டிவா ஸ்கூட்டரை தான் எலக்ட்ரிக் வெர்ஷனாக மாற்றி விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, ஹோண்டா நிறுவனத்தின் சிஇஓ சமீபத்தில் ஒரு பேட்டியில், முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2024ஆம் ஆண்டு தான் விற்பனைக்கு வரும் என கூறியிருந்தார். இதனிடையே, ஹோண்டா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் களம் இறங்கினால் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உண்டாகும். இதனால், ஹோண்டா நிறுவனம் எச்பி நிறுவனத்துடன் இதற்காக கை கோர்த்துள்ளதாகவும், எச்பி பெட்ரோல் பங்கில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை அமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.