பாகிஸ்தானில் தொழிற்சாலையை மூடிய ஹோண்டா நிறுவனம் - காரணம் என்ன?
பாகிஸ்தான் நாடு பொருளாதாரம் நிதி நெருக்கடியில் சிக்கி பல பொருட்கள் விலையேறி மக்கள் தவித்து வருகின்றனர். இதனிடையே, பாகிஸ்தான் நாட்டில் இயங்கி வரும் ஹோண்டா தொழிற்சாலையை மார்ச் 31 வரையில் தற்காலிகமாக மூட முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதனால், அந்நாட்டின் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை கட்டாயம் பாதிக்கும். ஹோண்டா அட்லஸ் கார்கள் நிறுவனம் பாகிஸ்தான் நாட்டில் ஹோண்டா ஆட்டோமொபைல் கார்களை அசெம்பிளி செய்து வருகிறது. இவை, ஹோண்டா நிறுவனத்திற்கு முன்பு பாக் சுசூகி மோட்டார் கம்பெனி, டோயோட்டாவின் இன்டஸ் மோட்டார் கம்பெனி ஆகிய நிறுவனங்களும் தங்களது தொழிற்சாலையை தற்காலிகமாக மூடியுள்ளது.
பொருளாதார நெருக்கடி - பாகிஸ்தானில் ஹோண்டா தொழிற்சாலை மூடல்
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் பணிவீக்கத்தின் காரணமாக அதிகப்படியான செலவுகள் ஆகியவற்றின் மூலம் அதன் தொழிற்சாலையை மார்ச் 9 முதல் 31 வரை மூடப்படும் என்று கூறியுள்ளது. மேலும், இந்த முடிவை ஹோண்டா நிறுவனம் பாகிஸ்தான் பங்குச்சந்தைக்கு தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் பாகிஸ்தான் வெளிநாட்டு இறக்குமதியில் வைத்த கட்டுப்பாடு தான். இதேபோன்று பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு அதிகளவில் பாதிக்கப்படுவதால் உற்பத்தி செலவுகள் அதிகளவில் அதிகரித்துள்ளது. சீனா, ஐஎம்எப் நிதியுதவி செய்தாலும் தற்போதைய நிலையில் பாகிஸ்தான் நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் திவாலாவதில் இருந்து தப்பிக்கவும் மட்டுமே உதவுகிறது. ஆனால், இந்த புதிய நிதியுதவிகள் இன்னும் அந்நாட்டின் பொருளாதாரத்திலும், மக்கள் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.