இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு!
இந்திய ராணுவ வீரர்கள், டெல்லி அரசு ஊழியர்கள் என சுமார் 16.80 கோடி பேரின் தகவல்களை திருடியதாக 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள மிகப்பெரிய 6 வங்கிகள் உட்பட பல வங்கிகளின் இணையத்தளங்களுக்குள் ஊடுருவி கைவரிசை காட்டியுள்ளனர். தனிநபர்கள் தகவல்கள் மட்டுமின்றி, அரசின் ரகசியத் தகவல்களையும் திருடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலை ஹைதராபாத்தைச் சேர்ந்த சைபராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, வங்கி வாடிக்கையாளர்கள் 1.1 கோடி பேர் மற்றும் பேஸ்புக் பயன்படுத்தும் 75 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. மேலும், 1.2 கோடி வாட்ஸ்அப் பயனர்கள், டெல்லி அரசின் 35 ஆயிரம் அதிகாரிகள், ராணுவத்தில் பணிபுரியும் 2.5 லட்சம் வீரர்கள் பற்றிய தகவல்களையும் திருடி உள்ளது தெரியவந்துள்ளது.