
கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி
செய்தி முன்னோட்டம்
கோவை மாவட்டம் பெரியநாயக்கம்பாளையம் வனசரகத்திற்குள் பூச்சியூரில் நேற்று(மார்ச்.,24) நள்ளிரவு காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள பட்டா நிலங்களுக்குள் செல்ல முயற்சி செய்துள்ளது.
அதனை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வனப்பகுதிக்குள் மீண்டும் அந்த யானையினை விரட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்பாராவிதமாக அந்த யானை மின்கம்பத்தில் மோதியுள்ளது.
இதில் அந்த மின்கம்பம் யானை மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
இது குறித்து அறிந்த பெரியநாயக்கம்பாளையம் வனத்துறை ஊழியர்கள் மற்றும் மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மேலும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கோவையில் இருந்து பூச்சியூருக்கு கால்நடை மருத்துவ குழு வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி யானை பலி
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு#kovai #elephant #DinakaranNews pic.twitter.com/pr0XM7tX8P
— Dinakaran (@DinakaranNews) March 25, 2023