கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
கோவை காரமடை அருகே, வாயில் காயத்துடன் உடல் மெலிந்த நிலையில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. அந்த யானை விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த காரணத்தினால், கும்கி யானையின் உதவியோடு வனத்துறையினர் அந்த காட்டு யானைக்கு மயக்கமருந்து செலுத்தி கடந்த மார்ச்17ம்தேதி பிடித்துள்ளனர். வாயில் காயம் அதிகமாக இருந்ததால் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அந்த யானை கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி மார்ச் 19ம்தேதி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, அந்த யானையின் உடலை பிரேதப்பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர்கள், யானை நாட்டுவெடிகுண்டு மருந்தினை சாப்பிட்டுள்ளது. அது வாய்குள் வெடித்ததில் யானையின் பற்கள் மற்றும் தாடை சேதமடைந்துள்ளது என்று தெரிவித்தனர். இதனால் தான் யானை உணவு உட்கொள்ளமுடியாமல் உடல்மெலிந்து உயிரிழந்துள்ளது.