அடுத்த செய்திக் கட்டுரை

அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்
எழுதியவர்
Sindhuja SM
Mar 25, 2023
03:00 pm
செய்தி முன்னோட்டம்
மார்ச் 25ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(மார் 25 கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
மார்ச் 26-28ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது
மார்ச் 29ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பதிவான இடங்கள்
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 25, 2023
செய்தி இத்துடன் முடிவடைந்தது