ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் முதல் பட்டத்தை வெல்லுமா டெல்லி கேப்பிடல்ஸ்?
மார்ச் 31ம் ஆ தேதி தொடங்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) தனது முதல் ஐபிஎல் பட்டத்திற்கான தேடலை புதிய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் மீண்டும் தொடங்க உள்ளது. 2022 டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சையில் இருந்து வரும் ரிஷப் பந்த் ஐபிஎல் 2023 சீசனில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் மூத்த பேட்டர் டேவிட் வார்னர் டிசி அணியை வழிநடத்த உள்ளார். வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் 2016இல் கோப்பை வென்றுள்ளதால், அதே மேஜிக்கை தற்போது டெல்லி அணிக்காகவும் அவர் செய்து காட்டுவார் என டெல்லி அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஐபிஎல் 2023க்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்கள்
டிசி ஏப்ரல் 1 ஆம் தேதி தனது முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு (எல்எஸ்ஜி) எதிராக விளையாட உள்ளது. டிசி அணியில் ரிஷப் பந்த் இல்லாத நிலையில், பில் சால்ட் கீப்பராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, ரிபால் பட்டேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அகமது, லுங்கி நிகிடி, முஸ்தாபிஸுர், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால், பில் சால்ட், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், மணீஷ் பாண்டே, ரிலீ ரோசோவ்