குழந்தைகளின் மன அழுத்தத்தை எப்படி குறைப்பது - 5 டிப்ஸ்
இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பள்ளி படிப்பு காலத்திலேயே குழந்தைகள் மன அழுத்தம், படபடப்பு, பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பெற்றோர்கள் ஒரு சில நிகழ்ச்சிகளை செய்வதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எளிதாக குறைக்க முடியும். உணவுப் பழக்கத்தை மாற்றுங்கள்: மன அழுத்தம், கார்டிசால் என்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோனை அதிகரிக்கும். இதனால் அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிட விரும்புவார்கள். தவிர்க்க, உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டும். சரியான நேரத்தில் தூங்க வைக்க வேண்டும்: குழந்தைகளுக்கு போதிய தூக்கமின்மை என்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே குழந்தைகள் தினமும் சரியான நேரத்திற்கு தூங்க செல்வதை வாரநாட்களில் மட்டுமல்லாமல் வாரஇறுதிகளிலும், பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்
நேரம் செலவிடுங்கள்: குழந்தைகளுடன் குறைந்தபட்ச நேரத்தையாவது பெற்றோர்கள் செலவிட முயற்சி செய்ய வேண்டும். அவர்களுடன் தினமும் என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசி தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் விளையாட வேண்டும். பயத்தை எதிர்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்: குழந்தைகள் பல விஷயங்களுக்கு, பதற்றமாக உணரலாம். பயத்தை நீக்க, தயக்கத்தை உடைக்கவும், தைரியத்தை வரவழைப்பதற்கும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். பலவிதமான சவாலான சூழல்களை எளிதாக கையாள்வதற்கான முயற்சிகளை பெற்றோர்கள்தான் அளிக்க வேண்டும். நேர்மறையாக சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள்: ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நேர்மறையாக அல்லது எதிர்மறையாக பார்க்கலாம். நேர்மறையாக பார்க்கும் பொழுது அது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று உங்கள் குழந்தைக்குப் புரிய வைத்து, நேர்மறையான சிந்தனையை வளர்ப்பதன் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.