Page Loader
உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது
உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது

உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது

எழுதியவர் Nivetha P
Mar 25, 2023
06:19 pm

செய்தி முன்னோட்டம்

உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் டெல்லி கேட் என்னும் பகுதியில் வசித்து வருபவர் ஷாஹித். இவரது மனைவியின் பெயர் நிஷா, இவர்களுக்கு மிராப் என்னும் 10 வயது மகனும், கைனன் என்னும் 6 வயது மகளும் இருந்துள்ளார்கள். கடந்த 22ம் தேதி விளையாட வீட்டின்வெளியே சென்ற குழந்தைங்களை காணவில்லை என்று நிஷா தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி கேட் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அதில் 22ம் தேதி குழந்தைகள் வெளியில் விளையாடியதற்கான தடங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் நிஷா மற்றும் ஷாஹித் ஆகியோரின் செல்போன் உரையாடல்களை போலீசார் ஆராய்ந்து பார்த்துள்ளனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

சிறையில் அடைப்பு

மயக்க ஊசி கொடுத்து கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம்

அதன்படி, நிஷாவுக்கும் அந்த உள்ளூர் கவுன்சிலரான சவுத் பவுஜி என்பவருக்கும் 4ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. சவுத் தனது மனைவியை பிரிந்துவாழந்து வந்துள்ளார். இதனால் நிஷா தனது கணவனை விட்டு வருவதாக சவுத்'திடம் கூறியதாக தெரிகிறது. அதற்கு அவர், நீ வேண்டுமானால் வா. குழந்தைகளை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார். இதனால் நிஷா மற்றும் சவுத் குழந்தைகளை கொல்ல முடிவுசெய்துள்ளனர். சம்பவ தினத்தன்று குழந்தைகளுக்கு மயக்கஊசி கொடுத்து, மயக்கமடைந்த பின்னர் கழுத்தை நெரித்து கொன்று சடலங்களை பெட்டியில் வைத்து அடைத்துள்ளார்கள். பின்னர் அந்தப்பெட்டியை காரில் ஏற்றிக்கொண்டுச்சென்று கங்கை கால்வாயிலில் தூக்கி வீசியுள்ளனர். இந்த கொடூரக்கொலைக்கு உடந்தையாக இருந்த பக்கத்துவீட்டுக்காரர்கள் 4 பேர் மற்றும் நிஷா,சவுத் ஆகிய 6பேரினை தற்போது போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.