உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில!
உலகெங்கிலும் உள்ள பாலங்கள், மக்களையும் இடங்களையும் இணைக்கும் வழிமுறையாக மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் அழகியலையும் கூட்டுகிறது. நடைமுறை வடிவமைப்புகளைக் கொண்ட பாலங்களைப் போலன்றி, சில பாலங்கள், தனித்துவமாகவும், அசாதாரணமாகவும், பலரையும் ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகள் கொண்டுள்ளன. ஆண்டுதோறும், மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும், உலகெங்கிலும் உள்ள சில தனித்துவமான பாலங்கள் இங்கே உள்ளன. கோல்டன் பாலம், வியட்நாம்: வியட்நாமின் டா நாங் நகருக்கு அருகிலுள்ள பா நா ஹில்ஸ் ரிசார்ட்டில் அமைந்துள்ள கோல்டன் பிரிட்ஜ், கடல் மட்டத்திலிருந்து 1,400 மீட்டர் உயரத்தில், 2018 -இல் கட்டப்பட்டது. 490 அடி நீளம் கொண்ட இந்த பாலம், இரண்டு ராட்சத கைகளால் உயர்த்திப்பிடிப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்பி வலையாலும், கண்ணாடியிழையாலும் உருவாக்கப்பட்டது இந்த பாலம்.
நகரின் வனப்பை மேலும் அழகூட்டும் மனிதனின் கட்டுமான ஆச்சரியங்கள்
லூபு பாலம், சீனா: ஜூன் 2003-இல் கட்டப்பட்ட லூபு பாலம், சீனாவின் ஷாங்காயில், ஹுவாங்பு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட, உலகின் முதல் எஃகு பாலமாகும். 550 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம், உலகின் இரண்டாவது பெரிய வளைவுப் பாலமாகும். ஹெலிக்ஸ் பாலம், சிங்கப்பூர்: ஹெலிக்ஸ் பாலம், மெரினா சவுத் உடன் மெரினா மையத்தை இணைக்கிறது. ஹெலிக்ஸ் பாலம் டிஎன்ஏவின் கட்டமைப்பை ஒத்திருப்பது, இதன் தனித்துவமாகும். மோசஸ் பாலம், நெதர்லாந்து: 1600களின் டச்சு நீர் கோட்டின் ஒரு பகுதியாக, ஃபோர்ட் டி ரூவர் என்ற கோட்டையில் கட்டப்பட்டது. இந்த மோசஸ் பாலம். மேலும் இந்த பாலம், 2010 இல் புனரமைக்கப்பட்டது.