இந்திய பாஸ்போர்ட் மட்டும் போதும், இந்த நாடுகளுக்கு விசா இல்லாமலே பயணிக்கலாம்!
செய்தி முன்னோட்டம்
வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவேண்டும் என்று நினைக்கும் போதே, அதற்கு முன்னர் இருக்கும் நீண்ட விசா நடைமுறைகள், உங்கள் திட்டமிடலை மறுபரிசீலனை செய்ய வைக்கும்.
இருப்பினும், சில குறிப்பிட்ட நாடுகள், இந்திய சுற்றுலாப் பயணிகளை, விசா இல்லாமல் பார்வையிட அனுமதிக்கின்றன.
2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய குடிமக்கள், உலகின் 26 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணம் செய்யலாம். நேபாளம் மற்றும் பூட்டான் உட்பட, விசா இல்லாமல், நீங்கள் செல்லக்கூடிய சில நாடுகள் இதோ:
மாலத்தீவுகள்: அதன் அழகிய கடற்கரைகள் மற்றும் ஸ்நோர்கெலிங், ஸ்கூபா டைவிங் போன்ற பல்வேறு நீர்-விளையாட்டு நடவடிக்கைகள் காரணமாக, இந்திய சுற்றுலாவாசிகளிடையே மிக பிரபலமாக உள்ளது. இந்திய குடிமக்கள், இலவச 30-நாள் விசாவைப் பெறலாம். இது 90 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம்.
சுற்றுலா
விசா இல்லாத சுற்றுலா போலாமா?
மொரிஷியஸ்: மொரிஷியஸ் ஒரு குட்டி நாடு. அதன் இயற்கை அழகு, கடற்கரைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள பயணிகளை ஈர்க்கிறது. இந்த கடற்கரை நகரத்தில், இந்திய குடிமக்கள், 90 நாட்கள் வரை விசா இல்லாத நுழைவைப் பெறலாம்.
சீஷெல்ஸ்: செஷல்ஸ் நகரமும் ஒரு அழகிய கடற்கரை சுற்றுலா நகராகும். இந்திய குடிமக்கள் இந்த நாட்டுக்குள் நுழைய, விசா தேவையில்லை. இருப்பினும், நீங்கள் சீஷெல்ஸ் நகரை அடைந்த பிறகு, அந்த நாட்டின் குடிவரவுத் துறையிடம் உரிய பெர்மிட் பெற வேண்டும்.
மக்காவ்: இந்நாட்டில், 30 நாட்களுக்கும் குறைவாக தங்குவதற்கு திட்டமிட்டுள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. எனினும், 30 நாட்களுக்கு மேல் தங்க தங்க நினைத்தால், விசா-ஆன்-அரைவல் வசதி உள்ளது.