Page Loader
பிசினஸ் ட்ரிப் போக பிளான் இருக்கிறதா? அப்படியென்றால் உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
லகிலேயே காஸ்டிலியான நகரமாக நியூயார்க் நகரம் தேர்வாகியுள்ளது

பிசினஸ் ட்ரிப் போக பிளான் இருக்கிறதா? அப்படியென்றால் உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 21, 2023
05:24 pm

செய்தி முன்னோட்டம்

கொரோனா லாக்டவுனிற்கு பிறகு, வணிகம் சார்ந்த பயணங்களும், சுற்றுலா பயணங்களும் அதிகரித்துள்ளன. அதில் குறிப்பாக வணிக பயணங்கள் குறித்து ஆய்வு செய்த, ECA இன்டர்நேஷனல் என்ற ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகிலேயே காஸ்டிலியான நகரமாக USA-வின் தலைநகரமான நியூயார்க் நகரம் தேர்வாகியுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட இந்த நகரில் 8% விலைகள் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. மேலும், இந்த நகரில் ஒரு நாளைக்கு வணிக பயணிகளுக்கு ஆகும் செலவு, தோராயமாக $796 என்றும் தெரியவருகிறது. அதாவது இந்திய மதிப்பில், நாளொன்றிற்கு, 65780 ரூபாய் செலவாகும். இந்த ஆய்வில், நான்கு நட்சத்திர ஹோட்டல்கள், உணவுகள், டாக்சிகள், பானங்கள் போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பயணம்

ஆசியாவில் காஸ்டலியான நகரமாக ஹாங்காங் நகரம் உள்ளது

ECA காஸ்டலியான நகரங்களின் தரவரிசை பட்டியலில், அமெரிக்கா நகரங்களான, வாஷிங்டன் டிசி மற்றும் சான் பிரான்சிஸ்கோவும் முன்னணியில் உள்ளது. மேலும், சுவிட்சர்லாந்து நாட்டின், ஜெனீவா மற்றும் சூரிக் நகரும் இடம்பிடித்துள்ளது. லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களும் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளது. ஆசியாவிலேயே வணிக பிரயாணத்திற்கு காஸ்டிலியான இடமாக ஹாங்காங் நகரம் உள்ளது. இங்கு தினசரி ஆகும் செலவு, $520 . இதற்கு அடுத்த இடத்தில சிங்கப்பூர் உள்ளது. இங்கு ஒரு நாளின் சராசரி செலவு $515 என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் டோக்கியோ நகரம் உள்ளது. அதிகரிக்கும் பண வீக்கமும், எரிபொருள் தேவை அதிகரிப்பு போன்றவை விலை வாசி ஏற்றத்தின் காரணமாக கருதப்படுகிறது.