கிரீஸிற்க்கு சுற்றுலா செல்கிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இதோ
கிரீஸ் நகரம் பண்டைய வரலாறு, அழகான இயற்கை காட்சிகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற பிரபல சுற்றுலா தலமாகும். ஒரு சுற்றுலா பயணியாக, உள்ளூர் மக்களிடம் சுமூகமாக பழகவும், உங்கள் பயணத்தை ஆனந்தமாகவும், பிரச்னையின்றி சென்று வருவதற்கு, நீங்கள் அந்த நாட்டின் விதிமுறைகளை தெரிந்து கொள்வதும், அதனை பின்பற்றுவதும் அவசியமாகிறது. கிரீஸ் நாட்டில், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் இதோ: தேவையில்லாமல் "ஓபா" என்ற சொல்லை பயன்படுத்தாதீர்கள்: 'Opa' பொதுவாக கொண்டாட்ட தருணங்களில் அல்லது மகிழ்ச்சி, உற்சாகம் அல்லது ஆச்சரியத்தை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. எனினும், அது சூழ்நிலைக்கு தகுந்தது போல மாறுபடும். அதனால், தேவை இல்லாமல், 'ஓபா' என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்.
திருமண விழாக்களுக்கு, கருப்பு நிற ஆடைகளை அணியாதீர்கள்
உள்ளங்கையை காட்டாதீர்கள்: 'மௌட்சா' என்று குறிப்பிடப்படும் இந்த சைகை, ஒருவரை நோக்கி, உங்கள் விரல்களை நீட்டி, உங்கள் உள்ளங்கையைக் காண்பிப்பது. இது, மிகவும் புண்படுத்தும் சைகையாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், பண்டைய பைசண்டைன் காலங்களில், கைதிகள் முகம் கறுக்கப்பட்டு, அவர்களின் உள்ளங்கைகளை, அவமானத்தின் சின்னமாக, தண்டனையின் அடையாளமாக காட்ட செய்து, அணிவகுக்கப்பட்டனர். ஒயின் பருகிக்கொண்டிருக்கும் போது, ரீபில் செய்யக்கூடாது: பழைய ஒயின் மேல், புதிய ஒயின் ஊற்றினால், அதன் சுவை மற்றும் நறுமணம் நீர்த்துப்போகும் என்று நம்பப்படுகிறது. திருமணங்களில் வெள்ளை அல்லது கருப்பு நிற உடை அணியக்கூடாது: திருமணங்களில் வெள்ளை நிற ஆடைகள், திருமண தம்பதிகள் மட்டுமே அணியவேண்டும். அதேபோல, கருப்பு நிற உடைகள், துக்க நிகழ்வுகளுக்கென்று ஒதுக்கப்பட்டது. அதை திருமண விழாக்களுக்கு அணியக்கூடாது.