சுற்றுலாவின் போது நீங்கள் நோய்வாய்ப்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்
செய்தி முன்னோட்டம்
நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால், சுற்றுலாவின் போது என்னவெல்லாம் நோய் தாக்குதல்கள் உண்டாகும் எனவும், அதற்கான அறிகுறிகள் என்னவென்பதையும் அறிந்திருப்பீர்கள்.
வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டால், கண்டிப்பாக உங்கள் ஹாலிடே மூட்-ஐ பாதிக்கும். அதனால், சுற்றுலா செல்லும்போது, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்.
கைகளை அடிக்கடி கழுவவும்: நம்மை அறியாமல், நம் உடலை பாக்டீரியாக்கள் தாக்குவதற்கு, நம் கைகளும், விரல்களும் முக்கிய காரணங்கள். அதனால், உங்கள் கைகளை அடிக்கடி கழுவுவதை வழக்கமாக்குங்கள் அல்லது குறைந்தது 60% ஆல்கஹால் கொண்ட சானிடைசரைப் பயன்படுத்துங்கள், குறிப்பாக பெஞ்சுகள், ஹேண்ட்ரெயில்கள் அல்லது லிஃப்ட் பட்டன்கள் போன்ற பொது பரப்புகளைத் தொட்ட பிறகு, கைகளை சுத்தம் செய்தல் அவசியம்.
சுற்றுலா
செரிமான ஒவ்வாமை இருக்கும்போது புதிய உணவுகளை தவிர்க்கவும்
உணவும், உணவகமும் சுத்தமாக இருக்கவேண்டும்: சுற்றுலாவின் போது, எப்போதும் பாட்டில் தண்ணீரை பயன்படுத்தவும். அசுத்தமான உணவை உட்கொண்டால், பயணத்தின் போது வயிற்றுப்போக்கு மற்றும் பிற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சூடான உணவுகளையும், உணவை பரிமாறவும் கையுறைகள் அல்லது கரண்டிகளை பயன்படுத்தவும்.
பழக்கப்பட்ட உணவை உண்ணுங்கள்: உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த வயிறு இருந்தால், பழக்கமான மற்றும் பாதுகாப்பான உணவை தேர்ந்தெடுங்கள். புதிய உணவை ட்ரை செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் மேலோங்கலாம். ஆனால் அதன் பின்னவிளைவுகளுக்கு தயார் செய்துகொண்டு, பரீட்சை செய்யவும்.
சுறுசுறுப்பாக இருங்கள்: விடுமுறையின் போது தேவையற்ற நோய்த்தொற்றுகளைத் தடுக்க விரும்பினால், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.