சோலோ ட்ரிப் போக வேண்டும் என்று ஆசையா? இதை எல்லாம் நம்பாதீர்கள்
பலருக்கும் சோலோ ட்ரிப் செல்ல வேண்டும் என்பது ஆசையாக இருக்கலாம். அதற்காக சிலர் முயற்சிகளை தொடங்கியும் இருக்கலாம். அப்படி தனியே பயணம் செய்ய வேண்டும் என ஆசைப்படுபவர்களை டீ-மோட்டிவேட் செய்வது போல, அவர்களின் ஊக்கத்திற்கு தடையாக சில கட்டுக்கதைகள் நிலவி வருகின்றன. அவற்றிற்கு செவி மடுக்காமல், உங்கள் பயணத்தை தொடருங்கள்! அப்படி உங்கள் பயணத்திற்கு தடையாக இருக்கும் கட்டுக்கதைகள் என்னென்ன என்பதை பாப்போம்! கலகலப்பான மனிதர்கள் மட்டுமே தனியாக பயணம் செய்ய முடியும்: தவறு! பயணம் என்பது ஒவ்வொரு ஆளுமை வகைக்கும் வேறுபடும். சோலோ ட்ரிப் போகவேண்டும் என ஆசைப்படுபவர்கள் தனிமை விரும்பிகளாகவும் இருக்கலாம். அவர்கள் தனியாக தங்கள் நேரத்தை அனுபவிப்பவர்கள் என்பதால், அவர்கள் உலகத்திலிருந்து விலகி இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.
சோலோ ட்ரிப் செல்ல காலநேரம் கிடையாது, வயது வரம்பும் கிடையாது
சோலோ ட்ரிப் பாதுகாப்பற்றது மற்றும் ஆபத்தானது: எந்த பயணத்தின் போதும் ஆபத்து நேரலாம். அது தனியாக போனாலும் சரி, குழுவாக போனாலும் சரி. சரியாக இடங்களை ஆராய்ச்சி செய்து, பயணப் பாதுகாப்புக் குறிப்புகளைக் கவனத்தில் கொண்டால், சாத்தியமான ஆபத்துகளை தவிர்க்கலாம். சோலோ ட்ரிப் என்பது சிங்கிள்களுக்கு மட்டுமே: சோலோ ட்ரிப் என்பது தனிமையில் இருக்கும், உறவில் இருக்கும் அல்லது உறவை முறித்தவர்கள் என அனைவருக்கும் பொதுவான விஷயம். தனியாக பயணம் செய்வது இளைஞர்களுக்கு மட்டுமே: எந்த வயதிலும், யார் வேண்டுமானாலும் சோலோ ட்ரிப் செல்லலாம். வயதானவர்கள், சூழ்நிலைகளைக் கையாளும் திறமை, அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். அதனால் அவர்கள் தங்கள் ரசனைக்கேற்ற இடங்களை தேர்வு செய்வதும், பிரயாணத்திற்கான விஷயங்களை செயல்படுத்துவதும் எளிது.