Page Loader
கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்?
ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் ASUS ROG Phone 7 ஸ்மார்ட்போன்

கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்?

எழுதியவர் Siranjeevi
Mar 25, 2023
07:34 pm

செய்தி முன்னோட்டம்

Asus நிறுவனம் கேம் பிரியர்களுக்காகவே ROG ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதுவரை ROG 6 வரை அறிமுகம் செய்துள்ளது. இதனிடையே, ASUS ROG Phone 7 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட உள்ளதாக கூறப்பட்டுகிறது. மற்ற மாடல்களை விட இந்த ஸ்மார்ட்போன் ஆனது, தனித்துவமான வடிவமைப்புடன் வெளியாகும் எனக்கூறப்படுகிறது. ASUS ROG 7 இல் ஸ்னாப்டிராகன் 8gen 2 சிப்செட் வசதியை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது. 6000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 6.8இன்ச் AMOLED டிஸ்ப்ளே 165Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்டுள்ளது. இந்தியாவில் ASUS ROG ஃபோன் 7, ரூ.71,999 இல் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

கேம் பிரியர்களுக்காக அட்டகாசமான லுக்கில் வெளியாகும் ASUS ROG Phone 7