Page Loader
முதல் வாரத்திலேயே கல்லாக்கட்டிய Oppo Find N2 Flip ஸ்மார்ட்போன்- Sold Out!
விற்பனையான முதல் வாரத்திலேயே விற்று தீர்ந்த ஓப்போ ஃபைண்ட் ஸ்மார்ட்போன்

முதல் வாரத்திலேயே கல்லாக்கட்டிய Oppo Find N2 Flip ஸ்மார்ட்போன்- Sold Out!

எழுதியவர் Siranjeevi
Mar 23, 2023
05:14 pm

செய்தி முன்னோட்டம்

நவீன ஸ்மார்ட்போன் சந்தையில் பல போன்கள் விற்பனையில் களைக்கட்டி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமான ஓப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் மார்ச் 17 ஆம் தேதி விற்பனையை தொடங்கியது. இந்த ஸ்மார்ட்போன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அந்நிறுவனத்தின் புதிய டாப் எண்ட் சாதனமாக அறிமுகமானது. இதனிடையே, விற்பனையான முதற்கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்துள்ளன. இதுபற்றி ப்ளிப்கார்ட் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மடிக்ககூடிய இந்த போன் டிஸ்ப்ளேவில் அதிகளவு கிரீஸ் இடம்பெறுவதை தவிர்க்கிறது. இத்தோடு இந்த மாடலில் 3.26 இன்ச் அளவில் பெரிய இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலின் விலையை ரூ.89 ஆயிரத்து 999 என ஆகும்.

ட்விட்டர் அஞ்சல்

Oppo Find N2 Flip ஸ்மார்ட்போன் முதல் வாரத்திலேயே விற்று தீர்ந்தது