IQOO Z7 5G : புதிய அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்!
நவீன டெக் உலகில் பல ஸ்மார்ட்போன்களை அதன் நிறுவனங்கள் அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஐகூ நிறுவனத்தின் புதிய Z7 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 6.38 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே மற்றும், 90Hz ரிப்ரெஷ் ரேட் உடன் வந்துள்ளது. முன்பக்கம் 16எம்பி செல்ஃபி கேமராவும் பின்பக்கம் 64பிரைமரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இத்தோடு, மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர் உடன் 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13 மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை os அப்டேட்டையும் வழங்குகிறது.
iQOO Z7 5G ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை சரிபார்க்கவும்
அத்தோடு மூன்று ஆண்டுக்கு செக்யுரிட்டி பேட்ச்களையும் கொண்டுள்ளது. ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போனில், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது நார்வே புளூ மற்றும் பசிபிக் நைட் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. விலை விபரங்கள் ஐகூ Z7 5ஜி, 6ஜிபி ரேம் 18 ஆயிரத்து 999 என்றும் 8ஜிபி ரேம் 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக ICIC மற்றும் HDFC வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.