Page Loader
POCO F5 5G: அட்டகாசமான அம்சங்களுடன் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியீடு!
போக்கோ எப்5 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியாகிறது

POCO F5 5G: அட்டகாசமான அம்சங்களுடன் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியீடு!

எழுதியவர் Siranjeevi
Mar 21, 2023
10:43 am

செய்தி முன்னோட்டம்

5ஜி தொழில்நுட்பம் வந்த பின் பல 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகமாகியுள்ளது. அந்த வகையில், போக்கோ நிறுவனம் அதன் மிட்ரேஞ் ஸ்மார்ட்போன் ஆன POCO F5 5G போனை ஏப்ரல் 6ஆம் தேதி அன்று வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எப்பொழுது வரும் என இணையத்தில் பேச்சுகள் வர தற்போது இந்த அப்டேட் கிடைத்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 12 டர்போவின் மறுபெயரிடப்பட்ட Rebranded version ஆக இருக்கும் எனக்கூறப்படுகிறது. POCO F5 5G ஸ்மார்ட்போனில் 120Hz மற்றும், 1,400 nits, HDR10+ ஆதரவு 6.67 அங்குல் QHD+ AMOLED பேனலைக் கொண்டிருக்கும் எனக்கூறப்படுகிறது.

போக்கோ ஸ்மார்ட்போன்

போக்கோ எப்5 5ஜி விலை மற்றும் அம்சங்கள் இங்கே

இவை ரெட்மி நோட் 12 இன் Snapdragon 7+ Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. போக்கோவில், 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி, ஆண்ட்ராய்டு 13 மொபைல் OS உடன் இயங்கும். கேமராவை பொறுத்தவரையில் டிரிபிள் கேமரா 50 எம்பி பிரைமரி 8 எம்பி மற்றும் 2எம்பி செகண்டரி ஷூட்டர் கொண்டுள்ளது. செல்பி கேமராவுக்கு 16எம்பி கொடுக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 67வாட் உள்ளது. இதனோடு 30வாட் சார்ஜர் கொடுக்கப்படுகிறது. பேட்டரி 5,500mAh உள்ளது. இணையத்தில் கசிந்த தகவல்படி போக்கோ எப்5 5ஜி மாடல் எண் 23013PC75I என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையை பொறுத்த வரை இந்தியாவில் ரூ.27,999 தொடங்கும் எனக்கூறப்படுகிறது.