கெரட்டின் ஹேர் சிகிச்சை எடுக்கப் போகிறீர்களா - இதைத் தெரிந்து கொள்ளுங்கள்
சமீப காலமாக கூந்தல் பராமரிப்பு மற்றும் சிகிச்சைகளில் கெரட்டின் ஹேர் டிரீட்மென்ட் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. கூந்தலை மிக எளிதாக பராமரிக்க உதவுகிறது என்பதால் இளம் பெண்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதுப் பெண்களுமே இந்த சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். ஒரே ஒரு கெரட்டின் தெரப்பி செய்து கொண்டாலே, விளம்பரங்களில் வருவது போலவே கூந்தல் பளபளப்பாக, பட்டு போல மாறுகிறது. ஆனால் இந்த சிகிச்சை எடுப்பதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு சில விஷயங்கள் உள்ளன. உண்மையாகவே ரசாயனங்கள் இல்லையா, முடியின் தன்மை பட்டு போல மாறுகிறா, தொடர்ச்சியாக பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. கெரட்டின் தெரப்பி ஒரு அழகு சிகிச்சையாக மட்டுமே பார்க்க முடியும்.
தொடர்ச்சியாக கெரட்டின் தெரபி எடுப்பவர்கள் முடி அடர்த்தி குறையக்கூடும்
கெரட்டின் தெரபி எடுத்த 2 அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு முடி உதிர்வது அதிகரிக்கலாம். தொடர்ந்து இந்த தெரபி செய்து கொள்பவர்களுக்கு முடியின் அடர்த்தி குறையக் கூடும். கெரட்டின் தெரப்பியில் பயன்படுத்தும் பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்காத ஃபார்மல்டிஹைடு என்ற ரசாயனம் இல்லை என்று கூறப்பட்டாலும், முடியை வெப்பமாக்கும் போது இந்த ரசாயனம் வெளியாகிறது. கெரட்டின் தெரபி முடியின் தன்மையையே மாற்றி விடுகிறது. எனவே இயல்பாகவே உங்களுக்கு இருக்கும் முடியின் தன்மை மாறுவதால், இதை அடிக்கடி பயன்படுத்துவது, பார்ப்பதற்கு அழகாக மட்டும் இருக்குமே தவிர பயனுள்ளதாக இருக்காது. வருடத்துக்கு ஓரிரு முறை பயன்படுத்துவது இயல்புத் தன்மையை பாதிக்காமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதைப் பற்றி மருத்துவர் ஆன்ச்சல் பகிர்ந்த குறிப்புகள் இங்கே.