
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதவியில் இருந்து தகுதி நீக்கம்
செய்தி முன்னோட்டம்
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேல்முறையீடு செய்ய பினையும் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் தனது பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8 (3)ன் படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு ஆண்களோ அதற்கு மேலாகவோ தண்டனை பெற்றால் தனது பதவியை இழப்பார் என்று கூறப்படுகிறது.
ராகுல் காந்தி 2019ல் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது எம்.பி.பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதவியில் இருந்து தகுதி நீக்கம்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு #RahulGandhi #DinakaranNews pic.twitter.com/FTNgnf9YAy
— Dinakaran (@DinakaranNews) March 24, 2023