தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது
செய்தி முன்னோட்டம்
சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் 47வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி சமீபத்தில் நடந்தது.
இதில் தமிழக அரசின் பல்வேறு அரங்குகள், அரசு சார்ந்த நிறுவனங்கள் அரங்குகள், தனியார் அரங்குகள் என பல அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
இதனை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இந்நிலையில் இந்த அரங்குகளுக்கு மத்தியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடம் சிறப்பான முறையில் அரங்காக அமைக்கப்பட்டிருந்தது.
இந்த பொருட்காட்சியின் நிறைவு நாளன்று அங்கு இடம்பெற்ற அரசுத்துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அமைத்த அரங்குகளுள் சிறந்த அரங்கு தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில், அரசுசார்ந்த நிறுவனங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அரங்கு 3வது இடத்தினை பிடித்து பரிசினை பெற்றுள்ளது.
டாக்டர்.பிரசன்ன குமார் ஆச்சார்யா
முதல் இடத்தினை பிடிக்க நடவடிக்கை
சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த பொருட்காட்சியின் நிறைவு விழாவில், 3ம் இடம்பிடித்த சென்னை மெட்ரோ நிறுவன அரங்குக்கான பரிசினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆகியோர் மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் டாக்டர்.பிரசன்ன குமார் ஆச்சார்யாவுக்கு வழங்கினர்.
பரிசினை பெற்றுக்கொண்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர்.பிரசன்ன குமார் ஆச்சார்யா பேசுகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் இடத்தினை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போல், ஒட்டுமொத்த வகையில் சிறந்த அரங்கிற்கான பரிசினை பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.