சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்து உத்தரவிட்டது.
யு19 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள முத்தரப்பு தொடர் மற்றும் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்தியாவின் யு19 அணியை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) அறிவித்துள்ளது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
வெள்ளத்தால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்கள் - பழுது நீக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழக அரசு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு உதவிகளை வழங்கி வருகிறது.
கடலில் கலந்த கச்சா எண்ணெய் - அகற்றும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவு
சென்னை மாநகரை அண்மையில் மிக்ஜாம் புயல் பெருமளவில் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.
48 மணி நேரத்தில் இரு சென்னை மருத்துவர்கள் மரணம்: மன அழுத்தத்தை குற்றம் சாட்டும் மருத்துவத்துறை
சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் இரண்டு மருத்துவர்கள் நீண்ட தங்களின் நீண்ட நேர ஷிப்ட்க்கு பின்னர், இரண்டு நாட்கள் இடைவெளியில் மரணித்துள்ளனர்.
10,12ம்.,வகுப்பு சிபிஎஸ்சி பொது தேர்வின் தேதிகள் குறித்த அறிவிப்பு
10ம்.,வகுப்பு மற்றும் 12ம்.,வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பினை சிபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.
மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
வைகை மற்றும் முல்லை பெரியாறு அணைகளிலிருந்து மேலூர் தொகுதி விளைநிலங்களுக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்தாண்டு படுதோல்வியடைந்த படங்கள்: ஒரு பார்வை
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகின்றன என்றாலும், அவை அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வணிக ரீதியாக வெற்றி பெறுவதில்லை.
உடல் எடையை குறைக்க தேனில் ஊற வைத்த பூண்டு
நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க போராடி வருகின்றனர்.
ராஜஸ்தான் முதல்வராகிறார் முதல்முறை MLA பஜன்லால் சர்மா
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக, எம்எல்ஏ பஜன்லால் சர்மாவை பாஜக கட்சி நியமித்துள்ளது.
#தலைவர்170 திரைப்படத்தின் டீசர் வீடியோ மற்றும் டைட்டில் வெளியானது
ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #தலைவர்170 திரைப்படத்திற்கு, வேட்டையன் என பெயரிடப்பட்டுள்ளது.
ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்ற எஃப்ஐஎச் ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை காலிறுதியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்காக 50 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்தியா
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் ஜனவரி 12 முதல் பிப்ரவரி 10 வரை கத்தாரில் நடைபெறும் ஏஎப்சி ஆசிய கோப்பை 2023க்கு 50 பேர் கொண்ட ஆயத்த அணியை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) அறிவித்தார்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் இந்தியாவின் செயல்திறன்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற உள்ளது.
யு19 ஆசிய கோப்பை : 52 ரன்களில் நேபாளத்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி
துபாயில் நடைபெற்று வரும் யு19 ஆசிய கோப்பை 2023 தொடரில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா நேபாளை வீழ்த்தியது.
'சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்' - ஆய்வுக்கு பின் மத்தியக்குழு தகவல்
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
சிறைவைக்கப்பட்ட ரஷ்ய அதிபர் புடினின் அரசியல் எதிரி திடீர் மாயம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர அரசியல் எதிரியாக கருதப்படும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் இருந்து காணாமல் போனதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற உள்ளது.
பாகிஸ்தானில் ராணுவ தளத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் இன்று (டிசம்பர் 12) நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
விரைவில் வாரத்திற்கு 3 நாட்களுக்கு மட்டும் அலுவலகத்திலிருந்து பணி: இன்ஃபோசிஸ் அறிக்கை
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்களுக்கு மூன்று நாள் அலுவலகத்திலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்க உள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில், கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
25 ஆண்டுகால கூகுள் வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலி
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளையாட்டு உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்களில் ஒருவராக உள்ளார்.
மீண்டும் இணையும் மங்காத்தா ட்ரையோ?- விடாமுயற்சி திரைப்படத்தில் அர்ஜுன் நடிப்பதாக தகவல்
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும், விடாமுயற்சி திரைப்படத்தில், அர்ஜுன் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம்
சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் பேட்டர் ஆசாத் ஷபிக்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பேட்டர் ஆசாத் ஷபிக் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான அவர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஆருத்ரா தரிசனம்: வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் வரும் 27ம்.,தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தொகையில் மூன்று இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம்
ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் இறுதிக்கட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 19இல் துபாயில் ஏலம் நடைபெற உள்ளது.
சூப்பர் ஸ்டார் பிறந்தநாளையொட்டி கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில், கவின் நடித்து வரும் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் வெளியானது.
மிக்ஜாம் புயலில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை
அண்மையில் மிக்ஜாம் புயல் தாக்கம் சென்னை இயல்பு நிலையினை புரட்டி போட்டது.
ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ளி அபின் உற்பத்தியில் முதலிடம் பிடித்த மியான்மர்
ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளி, மியான்மர் உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளதாக ஐநா அறிக்கை கூறுகிறது.
பொதுமக்களுடன் நீந்திய வைரல் திமிங்கலம் ஆஸ்திரேலிய கடற்கரையில் இறந்தது
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் அருகே உள்ள ஒரு பிரபலமான கடற்கரையில் உள்ள மணற்பரப்பில், கடந்த வார இறுதியில் தென்பட்ட திமிங்கலம் இறந்தது.
ரீவைண்ட் 2023 : கூகிளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவை
இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.
சென்னைக்கு மீண்டும் மழையா? தமிழ்நாடு வெதர்மென் கூறுகிறார்
சென்னையில், சென்ற வாரம் பெய்த புயல் மழையின் தாக்கமே இன்னும் ஓய்ந்தபாடில்லை.
ஆன்லைன் துஷ்பிரயோகத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கால்பந்து வீராங்கனைகள்; அதிர்ச்சி ரிப்போர்ட்
2023 மகளிர் உலகக் கோப்பையில் விளையாடிய 20% வீராங்கனைகள் ஆன்லைன் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாக ஃபிஃபா அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி
திருச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர் அமைச்சர் கே.என்.நேரு, இவரது தம்பி ராமஜெயம்.
ஹமாஸ் "கலைக்கப்படும் தருவாயில்" இருப்பதாகக் இஸ்ரேல் அறிவிப்பு
காசா பகுதியில் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் கலைக்கப்படும் தருவாயில் உள்ளதாக அறிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில்- ஆயிரம் ஆண்டுகளுக்கு புணரமைப்பு தேவைப்படாது, 6.5 அளவிலான பூகம்பத்தையும் தாங்கும்
நான்கு வருடங்களுக்கு முன்னர் அயோத்தி ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழி வகுத்ததை தொடர்ந்து, முதல் கட்ட பணிகள் முடிக்கப்பட்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
உச்ச நீதிமன்றம் ரத்து செய்த ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பிரிவு 370-இல் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் என்னென்ன?
நேற்று உச்ச நீதிமன்றம், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, 2019 மத்திய அரசால் நீக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 சரியே என்றது.
கேரளா ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டம்: முதலமைச்சரின் சதி என கவர்னர் குற்றசாட்டு
கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னை உடல் ரீதியாக காயப்படுத்த சதி செய்ததாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்- ஸ்டைலைவிட ரஜினி 'நடிகராக' ரசிக்கப்பட்ட படங்கள்
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல் படமான அபூர்வ ராகங்கள் தொடங்கி அண்மையில் வெளிவந்த ஜெயிலர் படம் வரை உலகம் முழுவதும் தன் ஸ்டைலுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறியப்படுகிறார்.
செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல்
ஏமனின் ஹூதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், வர்த்தக எண்ணெய் கப்பல் சேதமடைந்ததாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.
Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2023 லீலா பேலஸ் ஹோட்டலில் டிசம்பர் 15 முதல் 21 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திங்கட்கிழமை (டிசம்பர் 11) அறிவித்துள்ளது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 12-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாகிஸ்தானின் ரீ-ஆக்ஷன் என்ன?
ஆகஸ்ட் 2019-இல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தத்தஸ்தான, சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது மத்திய அரசு.
மழையால் உங்கள் சான்றிதழ்கள் சேதமடைந்ததா? கவலை வேண்டாம்..உங்களுக்கு ஒரு நற்செய்தி!
சென்ற வாரம் பெய்த புயல் மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
2023 - தமிழ்நாடு மாநிலமும் சர்ச்சைகளும் ஓர் பார்வை
2023ம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நடந்த பல பரபரப்பான நிகழ்வுகளுள் ஒருசிலவற்றை இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம்.
யு19 உலகக்கோப்பை 2024 திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
யு19 ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2024 தொடர் இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை திங்கட்கிழமை (டிச.11) ஐசிசி வெளியிட்டுள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு
2024 ஜனவரி 25 அன்று தொடங்க உள்ள இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகள் அறிவிப்பு
ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி திங்கட்கிழமை (டிசம்பர் 11) அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் துவங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று நேற்று(டிச.,10) இரவு 10 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் அதாவது, பழைய தாலுகா அலுவலகம் ரயில்வே கேட் அருகில் வரும் பொழுது திடீரென தடம் புரண்டுள்ளது.
சிறப்பு தகுதி நீக்கம்: ஜம்மு காஷ்மீரின் மன்னர் வாரிசும், காங்கிரஸின் மூத்த தலைவருமான கரண் சிங் கூறுவது என்ன?
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய பரபரப்பான தீர்ப்பில், அரசியல் களம் சற்று கலவரப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்.
குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவில் குற்றவியல் சட்டங்களைத் திருத்துவதற்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனை தொடர்ந்து, அவற்றை நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்
கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
ஸ்ரீ ரங்கத்தில் நாளை துவங்குகிறது வைகுண்ட ஏகாதேசி திருவிழா
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதர் கோயிலில் இந்தாண்டிற்கான வைகுண்ட ஏகாதேசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை(டிச.,12) துவங்குகிறது.
பிக்பாஸில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாரா கமல்ஹாசன்? அடுத்த host யார்?
சின்னத்திரை வட்டாரத்தில் ரியாலிட்டி ஷோக்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு.
இன்னும் 3 நாளில் தேமுதிக பொதுக்குழு கூட்டம்: விஜயகாந்த் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு
நடிகரும், தேமுதிகவின் பொது செயலாளருமான விஜயகாந்த்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே சீராக இல்லை.
மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு
மத்திய பிரதேசத்தின் முதல்வரை இறுதியாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. தற்போது மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவை அறிவிக்கப்பட்டுள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி
விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
கைகொடுத்த ஸ்கார்பியோ மாடல்; நவம்பர் மாதத்தில் அபார வளர்ச்சி கண்ட மஹிந்திரா
மஹிந்திரா நவம்பர் 2023க்கான விற்பனையில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 32.24% வளர்ச்சியை பெற்றதாக அறிவித்துள்ளது.
'பணத்தால் விசுவாசத்தை வாங்க முடியாது'; சிஎஸ்கே வீரரின் இன்ஸ்டா பதிவால் பரபரப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா ஐபிஎல் 2024 வர்த்தக காலக்கெடு முடிவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஒரு பூடகமான பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - கொள்ளையனை கைது செய்தது தனிப்படை காவல்துறை
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ்.
குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவம் - மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம்
சென்னை புளியந்தோப்பு பகுதியினை சேர்ந்தோர் மசூத்-சௌமியா தம்பதி.
சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு என்ன எதிர்காலத்தை வழங்கியுள்ளது?
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
அவுட் கொடுக்கலாமா கூடாதா? சர்ச்சையை கிளப்பிய சம்பவம்; வைரலாகும் புகைப்படம்
மெல்போர்ன் கிளப் கிரிக்கெட் விளையாட்டில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இருந்து மகளிர் ஐபிஎல்லுக்கு தேர்வான முதல் பெண்; யார் இந்த கீர்த்தனா?
தமிழகத்தில் இருந்து மகளிர் ஐபிஎல்லுக்கு விளையாட தேர்வு செய்யப்பட்ட முதல் வீராங்கனை என்ற பெருமையை கீர்த்தனா பாலகிருஷ்ணன் பெற்றுள்ளார்.
திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம்
நடிகை திரிஷாவுக்கு எதிராக, மன்சூர் அலிகான் தாக்கல் செய்திருந்த மான நஷ்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு எதிராக திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.
5 நாடுகள் பங்கேற்கும் போட்டிக்காக ஸ்பெயின் சென்றன இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள்
5 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டிக்காக இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளது.
மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளுக்கு சன் குழுமம் சார்பில் 5 கோடி நிதி உதவி
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக சன் குழுமம் சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின் இடம் ₹5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூர் கடற்பகுதியில் 20 சதுர கி.மீ.,பரப்பளவில் பரவிய கச்சா எண்ணெய்
சென்னை மாநகரை அண்மையில் மிக்ஜாம் புயல் பெருமளவில் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
பிற துறைகளில் சாதித்த தமிழ் சினிமா பிரபலங்களின் வாரிசுகள்
அரசியல், விளையாட்டு, சினிமா போன்ற பிரபலமான பல துறைகளில் பெற்றவர்களைப் போலவே, அவர்களது வாரிசுகளும் அந்தத் துறையில் நுழைந்து சாதிக்கிறார்கள்.
மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில், டிஸ்மிஸ் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I: தீபக் சாஹர் விளையாட வாய்ப்பில்லை என தகவல்
மூத்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் மீதமுள்ள இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் கூறியது என்ன?
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, ஆகஸ்ட் 2019 இல் அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டது.
தமிழக அரசின் வெள்ள நிவாரணம் பெற, ரேஷன் கார்டு அவசியம் இல்லை எனத்தகவல்
கடந்த வாரம், தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டது.
குடியேறுபவர்களை குறைக்கவும், மாணவர் விசா விதிகளை கடுமையாக்கவும் ஆஸ்திரேலியா திட்டம்
ஆஸ்திரேலியா அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதன் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும் நோக்கோடு, சர்வதேச மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான விசா விதிகள் கடுமையாக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை - பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி
பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
'நீர் வழிபடூஉம்' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார் ஈரோடு மாவட்ட எழுத்தாளர்
ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜர்பைஜானில் விடாமுயற்சி படக்குழுவினருடன் இணைந்த ரெஜினா கசாண்ட்ரா
அஜர்பைஜான் நாட்டில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அங்கு படமாக்கப்படும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்
ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசிற்கும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சட்டப்படி செல்லும்-உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவு 370-ஐ ரத்து செய்தது, சட்டப்படி செல்லும் என தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
விசா மற்றும் பார்ஸ்போர்ட் குளறுபடி; மருத்துவர், மேலாளர் இல்லாமல் வெளிநாடு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
விசா மற்றும் பாஸ்போர்ட் பிரச்சினைகளால் ஆஸ்திரேலியாவில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மருத்துவர் இல்லாமலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 19 வயதுக்குட்பட்ட அணி மேலாளர் இல்லாமலும் போட்டியில் பங்கேற்கிறது.
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால் கனடாவை விட்டு வெளியேறும் மக்கள்
கனடாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 42,000 பேர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நலமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் - மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியீடு
தேமுதிக கட்சி தலைவரும், சினிமா நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனது பொது வாழ்க்கையில் இருந்து சற்று ஒதுங்கி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.
பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பூட்டான் கிராமங்களில், ஊடுருவி கட்டுமானங்களை மேற்கொள்ளும் சீனா
பூட்டான் சீனா இடையே முறையாக தங்கள் எல்லையை நிர்ணிப்பதற்காக எல்லைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், வடக்கு பூட்டானின் ஜகர்லுங் பள்ளத்தாக்கில் அனுமதியற்ற கட்டுமான நடவடிக்கைகளை பெய்ஜிங் தொடர்ந்து வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 11
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது.
காசாவில் போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தின் மீது, ஐநா சபை நாளை வாக்களிக்கிறது
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில், காசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரும் வரைவு தீர்மானம் மீது, செவ்வாய்கிழமை வாக்களிக்க வாய்ப்பு உள்ளதாக அதன் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
"ஹமாஸின் முடிவின் ஆரம்பம்"- போராளிகளை சரணடைய வலியுறுத்தும் இஸ்ரேல் பிரதமர்
ஹமாஸ் போராளிகளை ஆயுதங்களை கைவிடுமாறு வலியுறுத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த அமைப்பு அதன் முடிவை நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளிநாட்டுக்கு பறக்க திட்டமா? அந்த இடங்களை தேர்வு செய்யுங்கள்
நம்மில் ஒரு சிலருக்கு குளிர்காலத்தில் பனிப்பிரதேசங்களுக்கு செல்வதை விரும்ப மாட்டார்கள்.
Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) திட்டமிடப்பட்டிருந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 11-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
370வது சட்ட பிரிவை (Article 370) நீக்கி ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் ஆகஸ்ட் 2019 முடிவு செல்லுபடியாகுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (டிசம்பர் 11, 2023) தீர்ப்பு வழங்க உள்ளது.