சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்- ஸ்டைலைவிட ரஜினி 'நடிகராக' ரசிக்கப்பட்ட படங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல் படமான அபூர்வ ராகங்கள் தொடங்கி அண்மையில் வெளிவந்த ஜெயிலர் படம் வரை உலகம் முழுவதும் தன் ஸ்டைலுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறியப்படுகிறார்.
ஆனால் சிலர், கமலஹாசன் அளவுக்கு அவரால் நடிக்க முடியாது. அமிதாப் பச்சனைப் போல கதாபாத்திரமாகவே வாழ முடியாது எனக் கூறுகிறார்கள்.
இருப்பினும், அவர் நாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்பதில் சந்தேகமில்லை. அப்படியென்றால் அவரை நட்சத்திரமாக மாற்றுவது எது? அவரது நடிப்பு.
ஸ்டைலுக்காகவே அறியப்படும் ரஜினிகாந்த், பல படங்களில் தன் நடிப்பால் மக்கள் மனதை வென்றுள்ளார். அந்த படங்களின் தொகுப்பு இதோ.
2nd card
16 வயதினிலே
பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தில் வில்லனாகவே வாழ்ந்திருந்தார் ரஜினிகாந்த். படத்தில் 'பரட்டை' கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரஜினிகாந்த், அவரது தீய செயல்களுக்காகவும், தந்திரமான செயல்களுக்காகவும் இன்றும் நினைவு கூறப்படுகிறார்.
1977ஆம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே திரைப்படம், கமலின் வெகுளித்தனமான நடிப்பிற்காக அறியப்பட்ட அளவிற்கு, ரஜினியின் வில்லத்தனத்திற்கும் அறியப்படுகிறது.
தமிழ் சினிமாவில் கல்ட் அந்தஸ்து பெற்று, இன்றளவும் இப்படம் நினைவு கூறப்படுவதற்கு, ரஜினியின் நடிப்பு மிகப்பெரிய பங்காற்றியுள்ளது.
4th card
ஆறிலிருந்து அறுபது வரை
ரஜினி என்ற சினிமா கலைஞரின் வாழ்வில், எஸ்பி முத்துராமன் என்பவர் பிரிக்க முடியாத நபர். இவர்கள் இருவர் கூட்டணியில் 24 படங்கள் உருவாக்கி உள்ளது.
ரஜினிகாந்தை கமர்சியல் படங்களுக்கு அழைத்து வந்த பெருமை முத்துராமனையே சேரும்.
கதாநாயகன் சந்தானத்தின் சிறுவயது முதல் முதுமை வரை நடக்கும் கதைதான் ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படம். இப்படம் ரஜினிக்கும் 'நடிக்க' தெரியும் என தமிழ் சினிமாவிற்கு காட்டியது.
3nd card
மூன்று முடிச்சு
தன் குருவான கே பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் ரஜினியின் நடிப்பு பலரின் புருவங்களை உயர்த்தியது. படம் வெளியான பல தசாப்தங்களுக்கு பின்னும், இச்சமூகத்திற்கு இப்படம் சர்ச்சையாகவே உள்ளது.
படம் ரஜினி, கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியை சுற்றி வருகிறது. காதலர்களான கமல் மற்றும் ஸ்ரீதேவியை, ரஜினி தந்திரமாக சூழ்ச்சி செய்து பிரித்து, ஸ்ரீதேவியை தன்வசமாக்க முயல்வது படத்தின் கதை.
ரஜினிக்குள் இருந்த வில்லத்தனத்தை வெளிக்கொண்டு வந்த மற்றொரு படம் மூன்று முடிச்சு.
5th card
தில்லு முல்லு
ரஜினியின் காமெடி, ரொமான்ஸ் என நடிப்பின் பல பரிமாணங்களையும் அவர் வெளிக்காட்டிய படம் தில்லு முல்லு.
கே பாலச்சந்தர் இயக்கிய இப்படம், இவர்கள் இருவரும் இணைந்த கடைசி படமாகவும் ஆகிப்போனது.
ஹிந்தி திரைப்படமான கோல்மாலின் ரீமேக்கான தில்லு முல்லு, ஒருவன் தனது வேலையைக் காப்பாற்ற முதலாளியை ஏமாற்றுவதைப் பற்றியது.
தேங்காய் சீனிவாசனிடம், ரஜினிகாந்த் வேலைக்கான நேர்காணலில் பங்கேற்கும் காட்சியை, இப்போது பார்த்தாலும் சிரிப்பலைகளை ஏற்படுத்தும்.
6th card
முள்ளும் மலரும்
தமிழ் சினிமாவின் காவியங்கள் என கூறப்படும் அளவிற்கு சிறப்பான படங்களில் ஒன்று முள்ளும் மலரும். இன்றுவரை இப்படம் ரஜினியின் நடிப்பின் உச்சம் என்றே கொள்ளலாம்.
மீண்டும் ரஜினியே நினைத்தாலும் கூட இது போன்று நடிக்க முடியாது.
படம் முழுவதும் சிறப்பான காட்சிகளை கொண்டிருந்தாலும், நடிகர் சரத்பாபு உடன் அவர் பேசும் வசனம் இன்றளவும் யாரால் மறக்க முடியாது.
"ரெண்டு கையும் இரண்டு காலும் போனா கூட இந்த காளிங்கரவன் பொழச்சுக்குவான் சார். கெட்ட பையன் சார் அவன்" என அவர் பேசும் வசனத்திற்கு கை தட்டாத ஆள் தமிழ்நாட்டிலேயே இல்லை.