
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால் கனடாவை விட்டு வெளியேறும் மக்கள்
செய்தி முன்னோட்டம்
கனடாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 42,000 பேர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 2022ல் 93,818 பேர் மற்றும் 2021ல் 85,927 பேர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இரண்டு தசாப்தங்கள் இல்லாத அளவிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு கனடாவை விட்டு மக்கள் வெளியேறியதாகவும், கொரோனா காலத்தில் சற்று குறைந்து இருந்த இந்த எண்ணிக்கை, மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாகவும் அரசாங்க தரவுகள் கூறுகின்றன.
மக்களின் வெளியேற்றம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரானதாகவும், திறமையான தொழிலாளர்களை ஈர்ப்பதில் கனடா தனது வசீகரத்தை இழந்து வருவதாகவும் பார்க்கப்படுகிறது.
2nd card
குடும்ப வருமானத்தில் 98% வாடகையாக வழங்கும் கனடா மக்கள்
அதிக வாழ்க்கைச் செலவு காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய, அல்லது அவ்வாறு செய்யத் தயாராகும் சிலரை ராய்ட்டர்ஸ் நேர்காணல் செய்தது.
பல புலம்பெயர்ந்தோர் புதிய நாட்டைக் கருத்தில் கொள்வதற்கான அவர்களின் முடிவிற்கு மிகப்பெரிய காரணம் என்று விண்ணைத் தொடும் வாழ்க்கை செலவுகள் என குற்றம் சாட்டுகின்றனர்.
கனடாவில் சராசரியாக குடும்பத்தின் 60% வருமானம், வாடகை வழங்குவதற்கு தேவைப்படுவதாகவும், இது வான்கூவர் மற்றும் டொராண்டோ நகர்களில் முறையே 98% மற்றும் 80% ஆக உயர்கிறது என, ராயல் பேங்க் ஆஃப் கனடாவின் செப்டம்பர் மாத தரவுகள் தெரிவிக்கின்றன.
3rd card
சர்வதேச மாணவர்களுக்கான வாழ்க்கைச் செலவுத் தேவையை உயர்த்திய கனடா
ஜனவரி 1 ஆம் தேதி முதல் சர்வதேச மாணவர்களுக் நிதித் தேவையை இரண்டு மடங்குகளுக்கு மேல் அதிகரிப்பதாக, அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் சமீபத்தில் அறிவித்தார்.
இது இந்தியா உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.
கடந்த 2 தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த வரம்பான 10,000 கனேடிய டாலர்களுக்கு பதிலாக, 20,635 கனேடிய டாலர்களை வங்கி கணக்கில் மாணவர்கள் வைத்திருக்க வேண்டும்.
இது மாணவர்களின் கல்வி மற்றும் பயணச் செலவுகளில் சேராது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் நிதி தேவை உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் வாடகைக்கு ஈடு கொடுக்காததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.