
10,12ம்.,வகுப்பு சிபிஎஸ்சி பொது தேர்வின் தேதிகள் குறித்த அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
10ம்.,வகுப்பு மற்றும் 12ம்.,வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பினை சிபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டின் 10ம்.,வகுப்பு பொது தேர்வு வரும் பிப்ரவரி.15ம்.,தேதி துவங்கி மார்ச் மாதம் 13ம் தேதி முடிவடைகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொது தேர்வானது பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜெஇஇ உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு இந்த பொது தேர்வுகளின் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சிபிஎஸ்சி பாடத்திட்டங்களின் புத்தகங்களில் 'இந்தியா' என்னும் வார்த்தைக்கு பதிலாக 'பாரத்' என்னும் வார்த்தையினை மாற்றியமைக்க என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளது என்னும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
அட்டவணை வெளியீடு
The Central Board of Secondary Education CBSE releases the date sheets for Class 10 and 12 board exam 2024, The exam will begin on 15 February till 2nd April pic.twitter.com/rgNXTNaGgA
— United News of India (@uniindianews) December 12, 2023