Page Loader
ஆருத்ரா தரிசனம்: வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஆருத்ரா தரிசனம்: வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

எழுதியவர் Nivetha P
Dec 12, 2023
02:36 pm

செய்தி முன்னோட்டம்

கடலூர் மாவட்டத்தில் வரும் 27ம்.,தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர்-சிதம்பரம் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் வரும் 27ம்.,தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில், வரும் ஜனவரி.6ம்.,தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவசர அலுவல் பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை மேற்கொள்ளவேண்டிய நிலை என்பதால் அந்த குறிப்பிட்ட அலுவலகங்கள் மட்டும் குறைந்த ஊழியர்கள் கொண்டு அன்றைய தினம் செயல்படவுள்ளது என்றும் அவர் தெளிவாக தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ஆட்சியரின் அறிக்கை