ஹமாஸ் "கலைக்கப்படும் தருவாயில்" இருப்பதாகக் இஸ்ரேல் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
காசா பகுதியில் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் கலைக்கப்படும் தருவாயில் உள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் தாக்குதல் காசாவில் உள்ள பாலஸ்தீன் மக்களை, பசி மற்றும் கடுமையான சுகாதார சீர்கேட்டுக்குள் தள்ளி வருவதால், பல தலைவர்கள் அப்பாவி மக்களை காப்பாற்ற அந்நாட்டை வலியுறுத்தி வருகின்றனர்.
இன்று போர் கடுமையாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய காசாவில் மோதல்கள் நடந்ததாக ஹமாஸ் கூறியதுடன், பிரதேசத்தின் தெற்கில் இஸ்ரேலிய தாக்குதல்கள் நடந்ததாக கண்ணால் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
பல ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்துள்ள, கான் யூனிஸ் மற்றும் எகிப்தையொட்டியுள்ள ரஃபா பகுதிகளில், தீவிர போர் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
2nd card
18,000 கடந்த பாலஸ்தீனர்களின் உயிரிழப்பு
"ஹமாஸ் கலைக்கப்படும் தருவாயில் உள்ளது. ஹமாசின் கடைசி கோட்டைகளையும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கைப்பற்றி வருகிறது" என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலான்ட் நேற்று தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நடந்து வரும் போரில், தற்போது வரை 18,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொள்ளப்பட்டுள்ளதாக, ஹமாசால் நிர்வகிக்கப்படும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என சுகாதார அமைச்சகம் கூறிவரும் நிலையில், உயிரிழந்தவர்களில் 6,000க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் போராளிகள் என இஸ்ரேல் கூறுகிறது.
அக்டோபர் 7 தாக்குதலில், 1,200 இஸ்ரேலிகள் கொல்லப்பட்ட நிலையில், 240 நபர்கள் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
3rd card
1.9 மில்லியன் பாலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
காசாவின் 2.4 மில்லியன் மக்களில், 1.9 மில்லியன் பேர் போரினால் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களில் பாதி பேர் குழந்தைகள் என ஐநா கூறுகிறது.
போரின் தொடக்க நாட்களில் காசாவின் வடக்கு பகுதியில் இருந்த மக்களை தெற்கு நோக்கி வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டிருந்தது.
தற்போது, தெற்கிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பான இடங்கள் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காசாவில் உள்ள பொதுமக்கள் பேரழிவுகரமான சூழ்நிலையை எதிர்கொள்வதை, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் ஜோசப் பொரெல் திங்களன்று, இரண்டாம் உலகப் போரின்போது ஜேர்மனியின் அழிவுடன் இதை ஒப்பிடுகிறார்.
4th card
போர் நிறுத்தம் மீதான தீர்மானத்தின் மீது ஐநா சபையில் இன்று வாக்கெடுப்பு
ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்ற தவறிய, காசாவில் போர் நிறுத்தம் கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, ஐநா சபையில் இன்று நடைபெற உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாதுகாப்புக்கு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தை, அமெரிக்கா தனது வீட்டோ சக்தி கொண்டு தடுத்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, ஒரு டசனுக்கும் அதிகமான பாதுகாப்புச் சபை தூதர்கள் ரஃபா எல்லைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, அரபு நாடுகள் ஐநா பொதுச் சபையின் புதிய சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுத்தன.