
மீண்டும் இணையும் மங்காத்தா ட்ரையோ?- விடாமுயற்சி திரைப்படத்தில் அர்ஜுன் நடிப்பதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும், விடாமுயற்சி திரைப்படத்தில், அர்ஜுன் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
துனிவு படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் அஜித் லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
படம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், நேற்று திரைப்படத்தில் ரெஜினா இணைந்துள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், தற்போது நடிகர் அர்ஜுனும் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், அர்ஜுன் மற்றும் அஜித் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அஜித்-திரிஷா-அர்ஜுன் ஆகியோர் மங்காத்தா திரைப்படத்திற்கு பின் மீண்டும் இணைவது, இப்படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மீண்டும் மங்காத்தா ட்ரையோ!
#VidaaMuyarchi 🎬🎥#Ajithkumar & #Arjun portions are currently being filmed in Azerbaijan 🤜🤛
— AmuthaBharathi (@CinemaWithAB) December 12, 2023
Trisha is also part of this schedule ❣️
The Mankatha Trio (AK - Arjun - Trisha)🔥 pic.twitter.com/KLTfRDeBKI