NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்னும் 3 நாளில் தேமுதிக பொதுக்குழு கூட்டம்: விஜயகாந்த் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்னும் 3 நாளில் தேமுதிக பொதுக்குழு கூட்டம்: விஜயகாந்த் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு
    தேமுதிக பொதுக்குழு கூட்டம்: விஜயகாந்த் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

    இன்னும் 3 நாளில் தேமுதிக பொதுக்குழு கூட்டம்: விஜயகாந்த் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 11, 2023
    07:27 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகரும், தேமுதிகவின் பொது செயலாளருமான விஜயகாந்த்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே சீராக இல்லை.

    எனினும், கட்சி சார்ந்த பல முக்கிய நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.

    அந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர், அவருக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, MIOT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ அறிக்கைப்படி, அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், செயற்கை சுவாசம் வைக்கப்பட்டது என்றும் ஒரு சில நாட்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

    இதனை கேட்டு, அவரின் ரசிகர்களும், தொண்டர்களும் மிகவும் மிகவும் வேதனை அடைந்தனர்.

    எனினும் அவர் மனைவி பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் நலமுடன் இருக்கிறார் என கூறினார்.

    card 2

    உடல்நலம் தேறி வீடு திரும்பிய கேப்டன் விஜயகாந்த் 

    தொண்டர்களின் சந்தேகங்களை போக்க, பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் உடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டார்.

    அதோடு, அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் கூறி வந்தார்.

    அதன் தொடர்ச்சியாக, இன்று காலை, விஜயகாந்த் உடல்நலம் பெற்றுவிட்டதாகவும், அதனால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் எனவும், MIOT மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியானது.

    அதனை தொடர்ந்து, இன்னும் மூன்று நாட்களில், அதாவது, வரும் டிசம்பர் 14ஆம் தேதி, தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், அந்த கூட்டத்தில் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொண்டு, வழிநடத்துவார் என தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ள விஜயகாந்த் 

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், 14/12/2023 அன்று திருவேற்காடு - GPN பேலஸ் திருமண மண்டபத்தில் எனது தலைமையில் நடைபெறுகிறது. #தேமுதிக pic.twitter.com/9QFRXNff3o

    — Vijayakant (@iVijayakant) December 11, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேமுதிக
    விஜயகாந்த்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தேமுதிக

    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை மத்திய அரசு
    எந்த கூட்டணியுடனும் தற்போது செயல்படவில்லை: தேமுதிக அறிவிப்பு விஜயகாந்த்
    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  அமித்ஷா
    விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - விஜயபிரபாகரன் பேட்டி விஜயகாந்த்

    விஜயகாந்த்

    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்
    வெளிநாட்டில் மாற்ற உடையின்றி தவித்த ரஜினிகாந்த்! என்ன நடந்தது? ரஜினிகாந்த்
    பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தேமுதிக
    கேப்டன் விஜயகாந்தால், தனுஷ் குடும்பத்தினர் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்  பிறந்தநாள் ஸ்பெஷல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025