கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளிநாட்டுக்கு பறக்க திட்டமா? அந்த இடங்களை தேர்வு செய்யுங்கள்
செய்தி முன்னோட்டம்
நம்மில் ஒரு சிலருக்கு குளிர்காலத்தில் பனிப்பிரதேசங்களுக்கு செல்வதை விரும்ப மாட்டார்கள்.
மாறாக, குளிர்காலத்திற்கு சற்றே வெதுவெதுப்பாக இருக்கும் ஊர்களுக்கு செல்லவே ஆசைப்படுவார்கள்.
ஆனால், அந்த மார்கழி மாதத்தில், இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் பல இடங்களில் குளிர் வாட்டி எடுக்கும்.
கவலை வேண்டாம், அந்த கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு, சற்று வெதுவெதுப்பாக இருக்கும் ஊர்களுக்கு செல்ல நாங்கள் உங்களுக்கு சில தேர்வுகளை தருகிறோம்.
card 2
இலங்கை
இலங்கை ஒரு ரம்மியமான நகரம். எழில்கொஞ்சும் வனங்களும், உயரமான மலைகளும், வரலாற்று சிதிலங்களும் நிறைந்துள்ளன.
அதேபோல, கடற்கரைகள் சூழ்ந்துள்ள அந்த தீவில், பல சாகச விளையாட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து வரும் பிரஜைகளுக்கு, விசா இல்லாத நுழைவுக்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளது.
அதோடு, இலங்கைக்கு வாரந்தோறும் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்தும், சென்னை துறைமுகத்திலிருந்தும் கப்பல் செல்கிறது.
உங்களுக்கு வித்தியாசமான பயண அனுபவம் தேவைப்பட்டால், அந்த பயணத்தை தேர்வு செய்யலாம்.
card 3
கேப் டவுன்
தென் ஆப்பிரிக்காவில் உள்ள அந்த கேப் டவுன் நகரத்தில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மட்டுமே குளிர்காலம்.
அதனால், அந்த டிசம்பரில் நீங்கள் தைரியமாக இங்கே செல்லலாம்.
இதுவும் கடற்கரை நகரமே. அந்த நகரம் பொதுவாக, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக உலகில் உள்ள பல சுற்றுலாவாசிகளை ஈர்க்கிறது.
வெண்மணல் கடற்கரைகள், மலைகள் மற்றும் ஊரெங்கும் உள்ள திராட்சைத் தோட்டங்களை கண்டு ரசித்து, அந்த விடுமுறையை கொண்டாடுங்கள்.
இங்கு கிடைக்கப்படும் வித்தியாசமான உணவுகளையும், பழங்களையும் சுவைக்கலாம்.
card 4
கோஸ்டா ரிகா
கோஸ்டா ரிகா நகரம் வருடம் முழுவதும் இதமான வானிலை மற்றும் மூச்சடைக்கக்கூடிய இயற்கைக்காட்சிகளை கொண்டுள்ளது.
சுவாரஸ்யமாக, குளிர்காலத்தில், இந்நகரின் வானிலை பொதுவாக குறைந்த ஈரப்பதம் மற்றும் சூடான வெப்பநிலை கொண்டுள்ளது.
நீங்கள் பசிபிக் அல்லது கரீபியன் கடற்கரைகளில் ஓய்வெடுக்க விரும்பினாலும், தேசிய பூங்காக்கள் மற்றும் எரிமலைகளை ஆராய விரும்பினாலும் அல்லது ஜிப்-லைனிங் மற்றும் சர்ஃபிங் போன்ற பரபரப்பான வெளிப்புற சாகச விளையாட்டுகளில் ஈடுபட விரும்பினாலும், அந்த நகரில் உங்கள் தேவைகள் அனைத்தையும் தீர்த்துக்கொள்ளலாம்.
அனைவருக்குமான நகரம் இது!
card 5
மாலத்தீவு
சமீபகாலங்களில் பலரும் மாலத்தீவிற்கு செல்வதை பார்த்திருப்பீர்கள்.
சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கும் அந்த நகரத்தின் பொருளாதாரம், சுற்றுலாவாசிகளை மேலும் ஈர்க்க பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக கொரோனா காலத்திற்கு பிறகு பல நாடுகளுக்கு வருகைக்கு பின் விசாவை நடைமுறைப்படுத்தியுள்ளது.
நீங்கள் ஆண்டின் எந்த நேரத்திலும் அந்த நகரத்திற்கு விசிட் அடிக்கலாம்.
இங்கே தண்ணீர் மேல் மிதக்கும் பங்களாக்கள், பவளப்பாறைகள் மற்றும் படிக-தெளிவான நீரைக் கொண்ட தீவுகள் பல உண்டு.
மேலும் ஸ்நோர்கெல், கடற்கரைகளில் ஓய்வெடுக்கவும், தனியார் தீவு ஓய்வு விடுதிகளின் ஆடம்பரத்தை அனுபவிக்கவும் மற்றும் இயற்கை அழகை விரும்புவோருக்குமான ஒரு அழகிய தேர்வு அந்த தீவு நகரம்.
card 6
துபாய்
ஆடம்பர ஷாப்பிங், துபாய் ஷேக்குகளின் வாழ்க்கை முறை, ஹம்மாஸ், பேரிச்சம்பழம், பாலைவன பயணம் என்பதையும் தாண்டி, தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி, கட்டிட கலையின் அதிசயங்கள் போன்றவற்றை காணலாம்.
இங்கே குளிர்காலத்தில் செல்வது தான் புத்திசாலித்தனம்.
காரணம், குளிர்காலத்தில் தான், மனிதனால் தாங்க கூடிய வெப்பநிலை நிலவும். மறந்தும் கோடைகாலத்தில் இங்கே விசிட் அடிக்காதீர்கள்.
இங்கே பாலைவன சஃபாரிகளின் சிலிர்ப்பை அனுபவிக்கவும், புர்ஜ் கலீஃபா உள்ளிட்ட கட்டிடக்கலை கண்டு வியக்கலாம்.
அதோடு மனிதனால் உருவாக்கப்பட்ட பனைமர வடிவிலான தீவுகள் போன்றவற்றையும் காணலாம். மேலும் பல சாகச விளையாட்டுகளும் உண்டு.