பிக்பாஸில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாரா கமல்ஹாசன்? அடுத்த host யார்?
சின்னத்திரை வட்டாரத்தில் ரியாலிட்டி ஷோக்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. இசைநிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்றவற்றின் மூலம் தங்கள் TRP-ஐ தக்கவைத்துக்கொள்ள தனியார் டிவிக்களுக்கு இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழ் சின்னத்திரை வட்டாரத்தில் ஒரு மோனோபோலி என்றே கூறலாம். அங்கில தொலைக்காட்சிகளில் முதல்முதலில் தொடங்கப்பட்ட அந்த நிகழ்ச்சி, அதன்பின்னர், படிப்படியாக பிராந்திய மொழிகளில் தயாரிக்க தொடங்கினர். தமிழ் மொழியில், 2017 -இல் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி மூலம் நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அந்நிகழ்ச்சியில் நெறியாளராகவும், தொகுப்பாளராகவும் அன்று முதல் அவரே உள்ளார். இடையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும், நடிகர் சிம்புவும், நடிகை ரம்யா கிருஷ்ணனும் தொகுத்து வழங்கினர்.
ரசிகர்களை ஈர்த்த கமல்ஹாசனின் நெறியாளர் பண்பு
தற்போது 7வது சீனில் இருக்கும் அந்த தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற முக்கிய காரணம், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விதமும், மக்களின் பிரதிநிதியாக பிக்பாஸ் இல்லத்திலுள்ள போட்டியாளர்களிடம் பேசுவது, அவர்களின் தப்புகளை சுட்டி காட்டுவது என பாரபட்சம் இன்றி நடப்பதாக கூறப்பட்டது. எனினும் அந்த சீசனில் கமல், ஒரு சில போட்டியாளர்களை சார்ந்து நடப்பதாக பல விமர்சனங்கள் எழுந்தன. சோசியல் மீடியாவில் அவரை பற்றி மீம்ஸ்களும் குவிந்து வருகிறது. எனினும் கமல், அதை பற்றி கண்டுகொள்ளாமல், அவர் பாணியில் நிகழ்ச்சியை தொடர்ந்து வருகிறார்.
கமல் அவுட், சிம்பு இன்?
அந்த நிலையில், பிக்பாஸ் ரெவியூவரான ஜோ மைகேல் என்பவர், இதுவே கமல் தொகுக்கவுள்ள கடைசி சீசன் என தனக்கு நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியதாக தெரிவித்துள்ளார். எனினும் அதற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக கூறவில்லை. எதிர்வரும் தேர்தலில், கமல்ஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாலும், தொடர்ந்து படங்களில் நடிக்கவுள்ளதாலும், அவர் பிக்பாஸ்சிலிருந்து விலக முடிவெடுத்திருக்கலாம் என கமல் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனை அடுத்து, பிக்பாஸ் தமிழின் அடுத்த சீசன் முதல் சிம்பு தொகுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நடிகர் சிலம்பரசன், சில நாட்கள் மட்டுமே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும், அவர் பேசிய விதம் பலரையும் கவர்ந்ததாலேயே அவரை மீண்டும் கூட்டி வர வேண்டும் என குரல்கள் இணையத்தில் ஒலிக்கின்றன.