Page Loader
மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளுக்கு சன் குழுமம் சார்பில் 5 கோடி நிதி உதவி
முதல்வர் ஸ்டாலின் இடம் நிதி வழங்கிய, கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி.

மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளுக்கு சன் குழுமம் சார்பில் 5 கோடி நிதி உதவி

எழுதியவர் Srinath r
Dec 11, 2023
03:44 pm

செய்தி முன்னோட்டம்

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக சன் குழுமம் சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின் இடம் ₹5 கோடி வழங்கப்பட்டுள்ளது. வங்க கடலில் இந்த மாத தொடக்கத்தில் உருவான மிக்ஜாம் புயல், தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களுக்கு வரலாறு காணாத மழையை வழங்கியது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தது. புயல் பாதிப்புகளிலிருந்து சென்னை மெல்ல மீண்டு வரும் நிலையில், நிவாரண பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது. புயல் நிவாரண பணிகளுக்காக, தமிழ்நாடு அரசிற்கு சினிமா பிரபலங்கள், பல்வேறு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் நிதியளித்து உதவி வருகின்றனர்.

2nd card

நிவாரண பணிகளுக்காக தொடர்ந்து உதவும் பெருநிறுவனங்கள்

இதன் தொடர்ச்சியாக, சன் குழுமத்தின் சார்பில் சன் டிவி நெட்வொர்க்கின் தலைவர் கலாநிதிமாறன், நிர்வாக இயக்குநர் காவேரி கலாநிதி ஆகியோர் ₹5 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினர். ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, இவர்கள் காசோலையை வழங்கியது குறிப்பிடத்தக்கது. மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பேரிடர் மேலாண்மை நிதிக்கு, டிவிஎஸ் குழுமம் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்கள் தல ₹3 கோடியும், பிஎஸ்ஜி குழுமம், சக்தி மசாலா நிறுவனம், சன்மார் குழுமம் ஆகிய நிறுவனங்கள் தலா ₹1 கோடியும், லயன் டேட்ஸ் நிறுவனம் ₹50 லட்சம் நிதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

நிவாரண பணிகளுக்காக சன் குழுமம் சார்பில் ₹5 கோடி நிதியுதவி