Page Loader
ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகள் அறிவிப்பு
ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகள் அறிவிப்பு

ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகள் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 11, 2023
08:58 pm

செய்தி முன்னோட்டம்

ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகளை ஐசிசி திங்கட்கிழமை (டிசம்பர் 11) அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ஆடவர் பிரிவில் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். டிராவிஸ் ஹெட் நவம்பரில் 220 ரன்கள் எடுத்தார். முன்னதாக, ஐசிசியின் சிறந்த நவம்பர் மாத வீரர் விருதுக்கு டிராவிஸ் ஹெட்டுடன் சக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் இந்தியாவின் முகமது ஷமி ஆகியோரும் போட்டியிட்டாலும், இறுதியில் டிராவிஸ் ஹெட்டுக்கு விருது கிடைத்துள்ளது. இது அவரது முதல் ஐசிசியின் சிறந்த மாத வீரர் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

ICC best player of the month for november announced

மகளிர் பிரிவில் வங்கதேச வீராங்கனைக்கு விருது

மகளிர் கிரிக்கெட்டில் வங்கதேச கிரிக்கெட் அணியின் இடது கை ஸ்பின்னர் நஹிதா அக்தர் விருதை வென்றார். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த தொடரில் வங்கதேசத்துக்காக 7 விக்கெட்டுகளை 14.14 என்ற வியக்கத்தக்க சராசரியில் வீழ்த்திய நஹிடா, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற வித்தியாசத்தில் கைப்பற்ற உதவினார். இதன் மூலம், அவர் பாகிஸ்தானின் சாடியா இக்பால் மற்றும் சக நாட்டு வீராங்கனையான பர்கானா ஹக் பிங்கி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, விருதை கைப்பற்றியுள்ளார். விருது வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நஹிதா அக்தர், ஐசிசி மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதை வெல்வது தனக்கு மிகப்பெரிய உத்வேகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.