
மிக்ஜாம் புயலில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை
செய்தி முன்னோட்டம்
அண்மையில் மிக்ஜாம் புயல் தாக்கம் சென்னை இயல்பு நிலையினை புரட்டி போட்டது.
சாலைகள் எங்கிலும் வெள்ளம், மின்-இணைப்புகள் துண்டிப்பு, உணவு-குடிநீர் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
தண்ணீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை படகுகள் மூலம் மீட்பு பணியினர் மீட்டெடுத்தனர்.
இன்னமும் இதன் தாக்கத்திலிருந்து சென்னை முழுமையாக மீளவில்லை.
இந்நிலையில் இந்த மோசமான இயற்கை பேரிடர் காலத்தில், சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச.,12)ஊக்கத்தொகையாக தலா ரூ.4,000 ஆயிரம் மற்றும் ஓர் பாராட்டு சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முதல்வர் இதனை வழங்கினார்.
மொத்தம் 3,429 தூய்மை பணியாளர்களுக்கு இந்த ஊக்கத்தொகையானது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஊக்கத்தொகை வழங்கப்பட்டது
#BREAKING | மிக்ஜாம் பேரிடரில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 3,429 பேருக்கு தலா ₹4000 ஊக்கத் தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!#SunNews | #CycloneMichuang | #ChennaiRains pic.twitter.com/BpAQ59Cq5y
— Sun News (@sunnewstamil) December 12, 2023