கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(டிச.,11)கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வரும் டிசம்பர் 15ம்.,தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24டிகிரியாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30-டிகிரி செல்ஸியஸாகவும் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.