அஜர்பைஜானில் விடாமுயற்சி படக்குழுவினருடன் இணைந்த ரெஜினா கசாண்ட்ரா
செய்தி முன்னோட்டம்
அஜர்பைஜான் நாட்டில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அங்கு படமாக்கப்படும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பின் நடிக்கும் திரைப்படம் குறித்த அப்டேட் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இருப்பினும் அப்படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகாமல், படப்பிடிப்பும் தொடங்கப்படாமல் இருந்தது.
அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் கருத்தொற்றுமை இல்லாததால் அவர் விலகியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மகிழ் திருமேனி அப்படத்தை இயக்குவதற்காக ஒப்பந்தமானார்.
கடந்த அக்டோபர் மாதம், அஜார்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
2nd card
விடாமுயற்சி படத்திற்காக 10 கிலோ குறைத்த அஜித்?
படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் நிலையில், தற்போது ரெஜினா கசாண்ட்ரா படத்தில் இணைந்துள்ளார்.
படப்பிடிப்பு ஏற்கனவே பல கட்டங்களாக அஜர்பைஜானில் நடந்து வந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக நடிகை திரிஷா மற்றும் அஜித் குமார் ஆகியோர் கடந்த 9 ஆம் தேதி அந்நாட்டிற்கு மீண்டும் சென்றனர்.
முழுக்க ஆக்சன் என்டர்டைனராக தயாராகி வரும் இப்படத்திற்காக, நடிகர் அஜித் தற்போது 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு பின்னர் அஜித், மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
அஜர்பைஜான் நாட்டில் நடிகை ரெஜினா
Regina Ma'am Joins #VidaaMuyarchi Shoot Today In Azerbaijan.
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) December 10, 2023
Welcome On board, Actress @ReginaCassandra.#AjithKumar pic.twitter.com/q4WtHZsiV1